சுவிட்சர்லாந்து செல்லும் இந்தியர்களிடம் நமஸ்தே சொல்லி பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் அலைகிறது. சுவிட்சர்லாந்துக்கு இந்தியர்கள் பலர் சுற்றுலா, வர்த்தக விஷயமாக சென்று வருகின்றனர். மிக பிரபலமான ஜெனிவா நகரில் பிக்பாக்கெட் கும்பல், இந்தியர்களை குறி வைத்து கொள்ளை அடித்து வருவது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சாலைகளில் இந்தியர்களை பார்த்தால், அங்கு வரும் ஒருவர், Ôநமஸ்தேÕ என்று சொல்வார்.
அல்லது Ôஷாருக்கான்Õ என்று சொல்வார். உடனே, அட இந்திய மொழியில் வணக்கம் சொல்கிறாரே என்று இந்தியர்கள் ஆச்சரியமாக அவரை பார்க்கின்றனர்.
அந்த நேரத்தில் இன்னொரு ஆசாமி அருகில் வந்து பாலிவுட் இந்தி சினிமா பாணியில் ஆடிப் பாடுவார். அதை ரசித்து பார்த்து விட்டு இந்தியர்கள் சென்று விடுவார்கள். நமஸ்தே சொன்னவரும், டான்ஸ் ஆடியவரும் அங்கிருந்து மறைந்து விடுவார்கள். அந்த சிறிது நேரத்தில் இந்தியர்களுடைய பர்ஸ், பை, விலையுயர்ந்த பொருட்கள் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது பிறகுதான் தெரிய வருகிறது. இதனால் சுவிட்சர்லாந்து வரும் இந்தியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source : Tamilmurasu