தற்போதைய செய்திகள்:

May 16, 2011

கோவிலுக்கு மசூதி': பாஜக கோரிக்கையை நிராகரித்த முஸ்லீம் தலைவர்கள்


ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தால், பாபர் மசூதி அமைக்க உதவுவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளதை முஸ்லீம்கள் நிராகரித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்கு சற்று தள்ளி பாபர் மஸ்ஜித் கட்டுவதற்கு பாஜக உதவும் என்று நிதின் கத்காரி நேற்று கூறியிருந்தார். இதை முஸ்லீம் தலைவர்கள் நிராகரித்து விட்டனர். பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும் ஒரே குரலில் இந்த அழைப்பை நிராகரித்துள்ளன. நிராகரித்ததோடு நில்லாமல், நீதிமன்ற உத்தரவு வரும் வரை பாஜக காத்திருக்க வேண்டும் என்றும் முஸ்லீம் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அஸாவுதீன் உவைஸி கூறுகையில், கோர்ட் உத்தரவு எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்போம். எங்களுக்கு பாதகமாக இருந்தாலும் சரி, சாதகமாக இருந்தாலும் சரி. அதே போல சொல்ல பாஜக தயாரா என்றார்.பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவின் முக்கிய உறுப்பினர்களான ஸபார்யாப் ஜிலானி மற்றும் ஸையத் ஸஹாபுதீன் ஆகியோர் கூறுகையில், விட்டுக் கொடுத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. இந்தப் பிரச்சினை நீதிமன்றங்கள் முன்பு உள்ளது. அவற்றின் தீர்ப்பு வரும் வரை அனைவரும் காத்திருக்கத்தான் வேண்டும் என்றர்.ராஜ்யசபா எம்.பியும், ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மஹமூத் மதானி கூறுகையில், முதலில் இந்தக் கருத்தை எந்த முஸ்லீமும் ஏற்க மாட்டார். 2வது, பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் நம்ப முடியாது. உச்சநீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதியையே மீறியவர்கள் அவர்கள் என்றார்.டெல்லி ஜூம்மா மசூதி இமாம் அகமது புகாரி கூறுகையில், இடம்தான் இப்போது பிரச்சினையே. முதலில் மசூதியை அவர்கள் ஆக்கிரமித்தனர். பின்னர் அதை இடித்தனர். இப்போது, நாங்கள் புதிய மசூதி கட்டிக் கொள்ள உதவுவதாக கூறுகின்றனர். இதை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.அரசியல் தலைவரான சையத் சஹாபுதீன் கூறுகையில், பாஜகவின் அழைப்பை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை.
இதே போன்ற ஒரு அழைப்பை முன்பே விஸ்வ இந்து பரிஷத் கூறியது.மாற்று இடத்திலோ அல்லது சற்று தள்ளியோ மசூதியை அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களது உரிமையை நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.
தகவல் : தமிழ்நாடு செய்திகள்

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!