அப்போது, வேலை விஷயத்தில் கறாராக இருக்காமல் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்கும்படி பாபுவிடம், அப்துல் கலாம் ஆசாத் கூறியுள்ளார். அதற்கு பாபு மறுத்து பேசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆசாத் அருகில் கிடந்த காலி ‘ரம்‘ பாட்டிலை எடுத்து பாபுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் உடைந்த அந்த பாட்டிலின் மூலம் பாபுவின் கழுத்து, முகம், கை, கால் என பல இடங்களில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
இதில் படுகாயமடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இரவு 10 மணிக்கு பணி முடிந்து, மற்ற ஊழியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பாபு படுகாயத்துடன் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபு இறந்தார். போலீசார் வழக்குப்பதிந்து ஆசாத்தை கைது செய்தனர்.
Source: Tamilmurasu
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!