பிரச்சனைகளை சுட்டி காட்டி காவல் துறையினரோ அல்லது வருவாய் அதிகாரிகளோ மறுக்க முடியாது என கூறியுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில், எஸ். ராஜ்கபூர் என்ற விசவசாயி டபுள் பேரல் துப்பாக்கி வைத்து கொள்வதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது அதற்கான அனுமதியை வருவாய் துறை நிர்வாக ஆணையர் மற்றும் தேனி மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் மறுத்தனர்.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பில், நீதிபதி டி. ஹரிபரந்தாமன், விண்ணப்பதாரர் எந்த விதமான சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடவில்லை என்ற நிலையில், அவரது பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்து கொள்வதற்கு உரிமம் வழங்கிட வேண்டும். அதனை துறை தொடர்பான அதிகாரிகள் மறுக்க முடியாது என கூறினார்.