இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.
இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும்,
குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.
3 comments:
வாக்கு வங்கி அரசியல் வாதிகளின் மாமூலான பேச்சுத் தந்திரம் இது .. ஜெயலலிதா இப்தார் விருந்தில் கலந்துக் கொள்வதில்லையா.. அதே போல இல்லை எனில் 15 லட்சம் வாக்குகள் மிஸ் ஆகிடுமே !!!? லேபர் கட்சிக் காரர்கள் எப்போதும் எங்கேயும் செய்யும் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று ...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி இக்பால் செல்வன் அவர்களே... ( வாக்கு வங்கி அரசியல் வாதிகளின் மாமூலான பேச்சுத் தந்திரம் இது ) என்ற தங்களின் வாதம்
ஒரு வேலை உண்மையாக கூட இருக்கலாம் அனால் டோனி பிளேரின் சகோதரி இஸ்லாத்திற்கு மாறி இஸ்லாத்திற்காக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் . இறைவன் நாடினால் விரைவில் அவரும் இஸ்லாத்திற்கு வருவார் ஏன் நீங்களும் கூடத்தான்....
யாவரும் எந்தவொரு மதங்களில் இணையலாம், அது அவரவர் விருப்பம், ஆனால் லண்டன் அரசியல் வாதிகளின் இரட்டைப் போக்கு இந்திய அரசியல் போல் தான் என்பது தான் உண்மை.
இஸ்லாம் எனது அறிவுக்கு உடன்படாத ஒரு சமயம் என்பதால் அதில் இணைவது எல்லாம் நடக்கவே நடக்காது, ஒருவேளை சௌதி உட்பட இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் சர்வமதங்களை அனுமதித் தருமாயின், அப்படி ஒன்று நடக்குமாயின்.. இஸ்லாம் குறித்து சிந்திப்போம் .. :)
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!