தற்போதைய செய்திகள்:

Oct 5, 2011

நமஸ்தே சொல்லி இந்தியர்களிடம் பிக்பாக்கெட்!

Indian Flagசுவிட்சர்லாந்து செல்லும் இந்தியர்களிடம் நமஸ்தே சொல்லி பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் அலைகிறது. சுவிட்சர்லாந்துக்கு இந்தியர்கள் பலர் சுற்றுலா, வர்த்தக விஷயமாக சென்று வருகின்றனர். மிக பிரபலமான ஜெனிவா நகரில் பிக்பாக்கெட் கும்பல், இந்தியர்களை குறி வைத்து கொள்ளை அடித்து வருவது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சாலைகளில் இந்தியர்களை பார்த்தால், அங்கு வரும் ஒருவர், Ôநமஸ்தேÕ என்று சொல்வார்.

அல்லது Ôஷாருக்கான்Õ என்று சொல்வார். உடனே, அட இந்திய மொழியில் வணக்கம் சொல்கிறாரே என்று இந்தியர்கள் ஆச்சரியமாக அவரை பார்க்கின்றனர்.
அந்த நேரத்தில் இன்னொரு ஆசாமி அருகில் வந்து பாலிவுட் இந்தி சினிமா பாணியில் ஆடிப் பாடுவார். அதை ரசித்து பார்த்து விட்டு இந்தியர்கள் சென்று விடுவார்கள். நமஸ்தே சொன்னவரும், டான்ஸ் ஆடியவரும் அங்கிருந்து மறைந்து விடுவார்கள். அந்த சிறிது நேரத்தில் இந்தியர்களுடைய பர்ஸ், பை, விலையுயர்ந்த பொருட்கள் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது பிறகுதான் தெரிய வருகிறது. இதனால் சுவிட்சர்லாந்து வரும் இந்தியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source : Tamilmurasu

Oct 1, 2011

ஆண்களுக்கு தாலிகட்டி குடும்பம் நடத்தும் பெண்கள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பூலரேவு கிராமத்தில் ஒரிசாவைச் சேர்ந்த மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குல வழக் கப்படி திருமணத்தின்போது பெண்களுக்கு ஆண்கள் தாலி கட்டுவதுபோல பெண்களும் ஆண்களுக்கு தாலி கட்டி 3 முடிச்சுப் போடுகிறார்கள். திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்கும் பழக்கம் இல்லை.மணமக னுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்கிறார்கள்.மேலும் திருமணத்தை தனித்தனியாக நடத்த மாட்டார்கள். 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊரில் பிரமாண்ட பந்தல் அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார் கள். கடந்த முறை 2008-ம் ஆண்டு நடந்த திருமண விழாவில் 102 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்த ஆண்டு 110 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவ்விழா நாளை இரவு நடக்கிறது. இதனால் பூலரேவு கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Source : Puthiyaulakam.com