தற்போதைய செய்திகள்:

Jun 29, 2011

ஆயுதம் வைத்து கொள்வதற்கு உரிமை உண்டு...


குடிமக்கள் ஆயுதங்கள் வைத்து கொள்வதற்கு உரிமை உண்டு: சென்னை உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், குடிமக்கள் ஆயுதங்களை வைத்து கொள்ளலாம். அதற்கு உரிமம் பெறுவதற்கான அனுமதியை சட்டம் மற்றும் ஒழுங்கு 
பிரச்சனைகளை சுட்டி காட்டி காவல் துறையினரோ அல்லது வருவாய் அதிகாரிகளோ மறுக்க முடியாது என கூறியுள்ளது.
 
கடந்த 2004-ம் ஆண்டில், எஸ். ராஜ்கபூர் என்ற விசவசாயி டபுள் பேரல் துப்பாக்கி வைத்து கொள்வதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது அதற்கான அனுமதியை வருவாய் துறை நிர்வாக ஆணையர் மற்றும் தேனி மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் மறுத்தனர்.
 
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பில், நீதிபதி டி. ஹரிபரந்தாமன், விண்ணப்பதாரர் எந்த விதமான சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடவில்லை என்ற நிலையில், அவரது பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்து கொள்வதற்கு உரிமம் வழங்கிட வேண்டும். அதனை துறை தொடர்பான அதிகாரிகள் மறுக்க முடியாது என கூறினார்.

Jun 28, 2011

அவன் இவன் - எவன் இவன்

சமூகத்தில் ‘உதிரி’களாக்கப்ட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முறையை சினிமாவின் இலாப வெறிக்கு பயன்படுத்தும் ஒரே இயக்குனர் நமது ‘பாலா’ தான்.

மனநோயிலிருந்து விடுபட்டும் ஆசிரமத்திலிருந்து வர இயலாத கதாநாயகன், தொண்டைக் குழியை கடித்து குதறும் கதாநாயகன், மனிதர்களை Horlicks போல் அப்படியே சாப்பிடும் கதாநாயகன்,

என அவரது பாத்திர படைப்புகளின் மீது திணிக்கப்பட்ட சோகமும், வக்கிரம் பிடித்த வன்முறைக் காட்சிகளும் தவறாமல் இடம் பிடிக்கும். அந்த வகையில், அவன் - இவன் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அபத்தத்தின் உச்சம்.

தமிழகத்தில் கேஸ் விலை குறைகிறது...


தமிழகத்தில் கேஸ் விலை குறைகிறது: முதல்வர் ஜெயலலிதாமத்திய அரசு கேஸ் விலையை உயர்த்தியது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் கேஸ் விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
 
இதன் பயனாக ஜூலை 1-ம் தேதி முதல்  தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீததை நீக்க   முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இந்த வரி குறைப்பு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் விலை உயர்விற்கு பின்  கேஸ் சிலிண்டர் விலை ரூ 402.35 ஆக விற்கப்பட்டது தமிழக அரசு  கேஸ் சிலிண்டர் விலை குறைப்புக்கு பிறகு  கேஸ் சிலிண்டர் ஒன்றிற்கு ரூ 387.62  ஆக இருக்கும். இதனால் சிலிண்டர்
 
ஒன்றிற்கு 14.73 பைசா குறைகிறது.

நன்றி-மாலைமலர்

கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைப்பு ...


தாம்பரத்தில் பரபரப்பு: 
கைக்குழந்தையை கொன்று 
பீப்பாயில் அடைத்த பெண்தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (20). 2 வருடத்துக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
 
சில மாதங்களாகவே ரேவதி மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
 

உலக பணக்காரர் பட்டியலில் ஆஸ்திரேலிய பெண் 1st


ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி சொத்து: உலக பணக்காரர் பட்டியலில் ஆஸ்திரேலிய பெண் முதலிடம்உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மெக்சிகோவைச் சேர்ந்த மேக்னெட் முதலிடம் வகித்து வந்தார். இவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் 2-வது இடம் வகிக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி.  
தற்போது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜினா ரினிகார்ட் என்ற 57 வயது பெண் தொழில் அதிபர் முதலிடத்தை பிடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி.இவர் நிலக்கரி மற்றும் இரும்பு தொழில் செய்கிறார். இந்த தொழில் நிறுவனங்களை இவர் சொந்தமாகவே நடத்துகிறார். பங்குதாரர்கள் யாரும் இல்லை.
எனவே, ஆஸ்திரேலியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இவர் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

நன்றி- மாலைமலர்

Jun 27, 2011

ராஜீவ் படுகொலை - இதுவரை வெளிவராத செய்தி!!


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. 

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

புதிய அமைச்சராக முகம்மது ஜான் நியமனம்..


2011062711.jpg தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவிலான மாற்ற் மேற்கொள்ளபப்ட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பதவியேற்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. ஆனால் எம்.எல்.ஏவாக பதவியேற்பதற்கு முன்பாகவே அவர் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

இந்த நிலையில் தற்போது அவரது இலாகாவுக்கு புதிய அமைச்சரை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

Jun 26, 2011

உ. பி. யில் தொடரும் கற்பழிப்பு..


 உத்தரபிரதேசத்தில் இளம் பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றும் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்.

ஜான்சி நகரில் திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய 14-வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல, கன்சிராம் நகர் மாவட்டம் பதேபுர் கலா கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கற்பழித்து விட்டான்.

அந்த சிறுவன் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர். பாரபங்கி மாவட்டம் இப்ராகிம்புர் கிராமத்தை சேர்ந்த 12 வயது தலித் சிறுமியை சிவகுமார் என்ற வாலிபர் கற்பழித்து விட்டார். கடந்த 25-ந் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி - சிந்திக்கவும்.நெட் 

பர்தா அணிந்து சென்றதால் முஸ்லிம் மாணவி நீக்கம் ..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவியை பள்ளியை விட்டு நீக்கி TC கொடுத்துள்ளது  சிதம்பெரம் பெண்கள் மேல்நிலை பள்ளி . இதனை கண்டித்து 23-6-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  நகர் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டனப் போஸ்டர்



பர்தா ...:

ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. 

உணர்வு அலுவலகம் யாருக்கு? மமக – TNTJ மோதல்


கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Jun 25, 2011

தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி ..

தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி என்று திமுக பேச்சாளர் வாகை முத்தழகன் பேசியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லையில், தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லை சங்கீதசபாவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமை வகித்தார். 

இந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் வாகை முத்தழகன் பேசுகையில், 

சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணம், கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்யாதது தான். 

Jun 24, 2011

சவூதியில் சில சகதிகள் .....


சவூதி அரேபியா என்றாலே அங்கு சட்டங்கள் கடுமையாக இருக்கும். தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று நான் சிறு வயதில் கேள்வி பட்டு இருக்கிறேன். ஏன் நம் நாட்டில் எதாவது தவறோ, கொலையோ, கொள்ளையோ நடந்தால் அடுத்த வினாடியே நாம் சொல்லுவோம் சவூதி அரேபியா மாதிரி தண்டனைகள் இருந்தால் தான் நம் நாடு உருப்படும் என்று கூறுவோம். ஏன் நான் கூட அப்படி தான் கூறி வந்தேன் சவூதி அரேபியா வராத வரை ... .


எனக்கும் என்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்கள் என் மனதில் ஈரத்துணி மாதிரி கனத்து கொண்டிருக்கிறது. அவற்றை உங்களிடம் காற்றாட விடுகிறேன் ... எனது பாரம் குறைய .....

பகவான் சாயிபாபாக்குச் சொத்து ஏன்?


சத்திய சாயிபாபா என்றும் பகவான் பாபா என்றும் பக்தர்களாலும், பக்தியைப் பரப்பி மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தி பணம் பறிக்கும் முதலைகளான ஊடகங்களாலும் புகழப்படும் சிறீமான் சாயிபாபா 4 வார காலம் படுத்த படுக்கையாகக் கிடந்து, செயற்கைப் பிராண வாயு (வென்டிலேட்டர்) அளிக் கப்பட்டு, படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் பழுதுபட்டு, அதிகபட்ச துன்பங்களை அடைந்து பரிதாபமாக மரணம் அடைந்தது – மனிதாபிமானம் உள்ளவர் களால் வருத்தப்படக் கூடியதே!
1) அதே நேரத்தில் பகவான் என்று சொல்லிக் கொள்பவர் – இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்ததிலிருந்தே பகவான் என்று கூறுவதெல்லாம் அசல் பொய் மூட்டை என்பதை உணருவதற்கு பாபா ஒரு உதாரணப் புருசர் ஆகிவிடவில்லையா? சிந்திக்கலாம்.

Jun 23, 2011

கண்களில் ஏன் இந்த கண்ணீர் அது யாராலே..? – கருணாநிதி

தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். 



குல்குஸ்மா :

பழம் அதிகமா பழுத்தால் அழுகிவிடும் .. அதிலும் நீங்கள் பழுத்த பழம் அல்லவா ஊழலில் அதுனால் அழுது விட்டீர்களோ என்னவோ....

Jun 21, 2011

இதுதாண்டா தினமலர்!!


ஒருவரை/ஒன்றைக் குறித்து நல்ல அபிப்பிராயம் கூறவேண்டுமெனில் அதனை யார் கூறவேண்டும்? மற்றொரு மனிதன் கூறவேண்டும்! தனக்குத் தானே "நான் நல்லவன்; நான் நல்லவன்" எனக் கூறிக்கொண்டால்?

பத்திரிக்கை உலகில் இந்த கேட்டகரியில் வரும் ஒரு பத்திரிக்கையுண்டு - தினமலர்!

"உண்மையின் உரைகல்" - இது இப்பத்திரிக்கை தனக்குத் தானே சூட்டிக்கொண்டுள்ள பட்டம்! இதன் யதார்த்த அர்த்தம் தெரிந்துதான் இப்படியொரு பட்டத்தைத் தனக்குத்தானே இப்பத்திரிக்கை சூட்டிக்கொண்டுள்ளதா என்று தெரியவில்லை.

Jun 20, 2011

தற்கொலைக்கு முன் மாணவன் எழுதிய கடிதம்....

புரியும்படி பாடம் நடத்துங்கள் என்று கேட்டதற்காகவும் பாடம் புரியவில்லை என்று தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதியதற்காகவும் ஆசிரியர்கள் மிரட்டப்பட்டதால் பிளஸ் மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் சாவதற்கு முன் அந்த மாணவர் எழுதியிருக்கும் ஏழுபக்க கடிதம் கல்வியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது


சேலம் அருகே உள்ள பணமரத்துப்பட்டிஅரசு மேல்நிலைப்பள்ளியில் +கணிதப்பிரிவில் படிக்கும் மாணவன் சீனிவாசன். சீனிவாசன் வீடு பணமரத்துப் பட்டியிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள நெய்க்காரபட்டியில் உள்ளது.


கடந்த 15ம் தேதி பள்ளிக்கூடம் திறந்த பின்னர்மூன்று நாட்களாக பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான்.


சீனிவாசனின் பெறோர்கள் சேகர்விமலா மற்றும் அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்இந்நிலையில் சனிக்கிழமை மதியம் சீனிவாசனின் தயார் விமலா சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

2ஜியைத் தொடர்ந்து கேஜி...

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.

""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.
தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

துப்பாக்கி சூடு கர்ப்பிணி பெண், 6 மாத குழந்தை, 5 பேர் பலி!

 பீகார், அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்சில்பொதுவழி சாலையை ஆக்கிரமிக்க முயன்றார் ஹிந்து பயங்கரவாத இயக்கமான பாரதிய ஜனதாவின் மாநில தலைவரின் மகன் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர் முஸ்லிம் கிராமவாசிகள். 

அவர்கள் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி பீகாரின் காவி பயங்கரவாத போலீஸ் நடத்திய அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 

இதைப்பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ்பட், சமூக சேவகர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு பீகார் போலீஸின் கொடூர முகத்தை வெளிக்கொணர்ந்தது.

Jun 18, 2011

ரஜினிக்கு என்ன ஆச்சு....? –



நாளுக்கு நாள் நடிகர் ரஜினிகாந்த் செய்து வரும் காமெடியை பார்க்கும் போது தான் எனக்கு இப்படி தலைப்பிட தோன்றிற்று.

கடந்த கால தேர்தலில் அவர் பேசிய வார்த்தைகளையும் இப்போது அவர் கூறும் கருத்துகளையும் பார்க்கும் பொது அவர் சென்றிருக்க வேண்டியது சிங்கப்பூர் அல்ல சென்னை கீழ்ப்பாக்கம் என்று நீங்களே சொல்லுவீர்கள்.

கடந்த கால தேர்தலில் “ மறுபடியும் இந்த ஜெயலலிதா ஜெயிச்சா இனி இந்த தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது “ என்று அரைகூவல் விட்டவர் தான் இந்த ரஜினிகாந்த் .தற்பொழுது உடல் நிலை சரியானதும் சிங்கப்பூரில் இருந்து தொலைபேசி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பேசும் போது “ சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தமிழகம் காப்பாற்ற பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்”.

இது பத்து நாட்கள் நாடகம் அல்ல; பத்து வருட நிஜம் ;

ஜனநாயக ஆட்சியதிகாரத்தில் ஆயுதமேந்திப் போராடும் போராட்டங்களைவிட உண்ணாவிரதப் போராட்டங்களே அரசுக்கு எதிரான வீரியமான போராட்டமாக இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சத்யாகிரகப் போராட்டங்களே வெற்றியைத் தரும் என்றதொரு மாயையும் மக்களிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.


ஆனால் உண்மை நிலை என்ன?

அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி! 

Jun 17, 2011

இஸ்லாத்தை நோக்கி டோனி பிளேர்!


இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.
இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும்,
குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

Jun 16, 2011

இவர் துறவியா ...? இல்லை பாபா ராம்தேவ் நீங்கள் துறவியா...?


கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுவாமி நிகமானந்தா வீர மரணமடைந்தார்.

உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா வயது 36, கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகமானந்தாவின் உயிர் பிரிந்தது.

இதற்கிடையே, சுவாமி நிகமானந்தாவின் மரணம் குறித்து, பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவருக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும், மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார்.

Jun 15, 2011

சென்னை பெண்ணுக்கு தூக்கு - போதைப்பொருள் கடத்தல்

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு போதைப் பொருள் கடத்தியதற்காக அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சென்னையை அடுத்த பட்டூர் மாங்காடு பஜார் தெருவைச் சேர்ந்தவர் பசிலாபீ (62). அவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்ததால் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்தது. அதனால் பசீலாபீ வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்க முடிவு செய்தார்.

முதலில் துபாயில் வேலை பார்த்த அவர் விசா காலம் முடிந்தவுடன் நாடு திரும்பினார். பின்னர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஏஜெண்ட் மூலம் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவர் மாதம் 13-ம் தேதி மலேசியாவுக்கு புறப்பட்டார். விமான நிலையத்திற்கு வந்த டிராவல் ஏஜென்சி உரிமையாளர் பசீலாபீயிடம் ஒரு சூட்கேசை கொடுத்து மலேசிய விமான நிலையத்தில் ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

Jun 14, 2011

குதிரையில் சவாரி செய்தபோது விழுந்து நித்தியானந்தா படுகாயம்

 செக்ஸ் வழக்கில் சிக்கிய நித்தியானந்தா காலையில் குதிரையில் ஏறி உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது.

நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நித்தியானந்தா இடம் பெற்ற காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கி தலைமறைவார். ஒரு மாத தேடலுக்குப் பின்னர் அவரை இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து போலீஸார் பிடித்துக் கொண்டு வந்தனர்.

கைது செய்யப்பட்ட நித்தியானந்தா சிறையிலும் அடைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியுள்ளார். அவருடன் தற்போது ரஞ்சிதாவும் ஆசிரம சேவையில் கலந்து கொண்டுள்ளார்.

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோர்ட்டில் ஆஜர்; கைது வாரண்டு ரத்து


ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. 
கோர்ட்டில் ஆஜர்; கைது வாரண்டு ரத்துமனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏவான இவர் உள்பட 5 பேர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
 
வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை முறையான ஆவணங்களை காட்டாமல் பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது 5 பேரும் ஆஜராக வில்லை. இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு மோகன் தாஸ் 5 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தர விட்டார்.வருகிற 20-ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராகி வாரண்டை திருப்ப பெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் ஜவாஹிருல்லா, ஹைதர்அலி உள்பட 5 பேரும் இன்று எழும்பூர் கோர்ட்டில் அஜரானார்கள். இதை தொடர்ந்து அவர்கள் மீதான கைது வாரண்டு ரத்து செய்யப்பட்டது

Source - Maalaimalar

2050 வரை திமுக ஆட்சி நடந்திருந்தால்?


2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டின் வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கும்.

முதலில் " கடவுள் வாழ்த்து " 
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி 
திருக்குவளை தீய சக்தியே போற்றி 
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி 
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி 
கனிமொழியின் தந்தையே போற்றி 
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி 
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி 
தளபதியின் தந்தையே போற்றி 
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி 
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி 
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி 
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி 
ஈழத்தை அழித்த இதயமே போற்றி 
தமிழின துரோகியே போற்றி போற்றி 

Jun 12, 2011

சவூதி - பச்சை, மஞ்சள், சிகப்பு


சவூதி தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று அவசர அவசரமாக நிடாகட் பற்றிய திடுக்கிடும் அறிவிப்புகளை வெளிட்டுள்ளது.
SAUDIZIATION அதாவது சவுதிமயமாக்குவது என்ற கோட்பாடில் சவூதிகளின் வேலையில்லா திண்டாத்தை குறைக்க சவூதி அரசு நிடாகட் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.அதன்படி சவூதில் செயல்பட்டு வருகின்ற கம்பெணிகள் பச்சை, மஞ்சள், சிகப்பு என்று மூன்று தரமாக பிரிக்கப்பட்டுள்ளது.
தங்களது கம்பெணி எந்த தரத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள
இந்த சுட்டியை  க்ளிக் செய்து பார்க்கவும் http://www.mol.gov.sa/Services/Inquiry/NonSaudiEmpInquiry.aspx?m=4

Jun 9, 2011

11ஆயிரம் பேருக்கு ஆயுத பயிற்சி அளிக்கிறார் 5000ஆயிரம் கோடி அதிபர் பண்டாரம் ராம் தேவ் – வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு


கறுப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், 11,000 பேர் கொண்ட இளைஞர் படை அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படும்' என, யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பெண்கள் உட்பட 20 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எல்லாவிதமான பயிற்சிகளும் வழங்கப்படும். இவர்கள், தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்வதற்கும் தயாராக இருப்பார்கள். ஆனால், இந்தப்படை அமைதியான முறையில் தான் போராடும்.நாட்டின் தற்போதைய தேவையைக் கருதி (ராம்லீலா மைதானத்தில் நடந்த அராஜகம்) இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனது அடுத்த உண்ணாவிரதப் போராட்டம், டில்லி ராம்லீலா மைதானத்தில் தான் நடைபெறும். இதில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். அப்போதும், போலீஸ் அராஜகம் நடக்கும்பட்சத்தில், அதற்கு தகுந்த பதிலடி தரப்படும்.இவ்வாறு ராம்தேவ் ஆவேசமாக பேசினார்.

Jun 8, 2011

என்னா ஹசாரே நீங்களுமா..!?..அன்னா ஹஸாரே வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள் !!


அன்னா ஹஸாரே ஒரு மாதிரி கிராமத்தை நடத்தி வருகிறார். இந்த கிராமத்தில் இன்னும் தீண்டாமை இருக்கிறது.
அந்த கிராமத்தில் தலித் மக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
மேலும் அந்த கிராமத்து தலித் மக்களை இன்னும் ஜாதியின் பெயரை சொல்லி அழைக்கும் இழி நிலை தொடர்கிறது. மேலும் அவர்கள் ஜாதி அடிப்படையில் வேலை வாங்க படுகிறார்கள்.
இவர்களை வேறு வேலைகள் செய்ய அனுமதிக்க படுவதில்லை. அந்த கிராம மக்கள் கூறுகிறார்கள் அன்னா ஹஸாரே என்ன சொன்னாலும் நாங்கள் கேட்போம் என்று.

இலங்கை மீது பொருளாதார தடை: ஜெயலலிதாவின் தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் வரவேற்பு


இலங்கை மீது பொருளாதார தடை: ஜெயலலிதாவின் தீர்மானத்துக்கு
 
 அனைத்து கட்சிகளும் வரவேற்பு
லங்கையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.   இதன் மீது பேசிய அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை வரவேற்றனர்.
விஜயகாந்த் (எதிர்கட்சி தலைவர்):- முதல்- அமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை எனது சார்பிலும், எங்கள் கட்சி சார்பிலும் வரவேற்கிறேன். இந்த பிரச்சினையில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் உள்ளோம். ஆனால் இந்த பிரச்சினையில் இதே சட்டசபையில் இதற்கு முன் என்ன பேசப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். அப்போது முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் இடையிலேயே உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு இலங்கையில் சண்டை நின்று விட்டதாக கூறினார்.

கடல்லயே இல்லையாம் நீங்க கேட்ட ஜாமீன்...


னிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை காலை 10.30 மணியளவில் டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி அவர்களில் வக்கீல் ராம்ஜெத் மலானி அவரிடம் கூறுகையில்
“ அம்மா வஞ்சர மீனு இருக்குங்குறான் , வால மீனு இருக்குங்குறான், கெண்டை மீனு இருக்குங்குறான், கெலத்தி மீனு இருக்குங்குறான், ஏன் சுறா மீனு கூட  இருக்குங்குறான்
நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லைன்னு சொல்லிட்டாங்க “
குல்குஸ்மா – கடல்லயே இல்லையாம்..........

Jun 7, 2011

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கரகேலிக்கூத்து.


சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.
அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதி மாறன் பதவி பறிப்பு?


ழல் புகார்களில் சிக்கியுள்ள ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பதவி, அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது பறிக்கப்படும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். மேலும் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் பழைய சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

லிப்யாவின் மறுபக்கம் – ஒரு உண்மை ரிப்போர்ட் -உலகில் மிகப்பெரிய சர்வாதிகாரி கடாபியா..?,சதாம் ஹூசைனா..?, இல்லை அமெரிக்காவா..??


லிபியாவில் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிப்பு அப்படி இப்படி என்று கேள்வி பட்ட உங்களுக்கு லிபியாவின் மறுபக்கம் பற்றிய பல
அமெரிக்க கைக்கூலி ஏடுகளால் மறைக்கப்பட்ட சில உண்மை தகவல்கள்

1) லிப்யா அரசு தனது நாட்டு மக்களின் நலனுக்காக வட்டியில்லா கடன்
   கொடுக்கின்றது .

Jun 6, 2011

என் மகள் கனிமொழி ஒரு மலர்!!---மற்றவர்கள் எல்லாம் களிமண்ணா

திருவாரூரில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் கலைஞர் கலந்துகொண்டு பேசினார்.

அவர், ’ ’என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ,  அலட்சியத்தாலோ சிறையில் இருக்கிறார்.

வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை.  கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான்.

பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

குருட்டு மோடியே கண் திறந்து பார்!!

  பாபா ராம்தேவோடு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

  * இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே தேசபிதா காந்தியை கொன்றாரே...  அந்தநாள்!

* உங்கள் தலைமையில் குஜராத் இனப்படுகொலைகளை நடத்தி, ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்தீர்களே,...அந்தநாள்!

* நீங்கள் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் ரத யாத்திரை என்று ஒரு ரத்த யாத்திரை நடத்தினார்களே ... அந்தநாள்!