தற்போதைய செய்திகள்:

May 29, 2011

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!

 புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.


அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!

அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.

அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.

இதுவே அமைச்சர் ஒரு ஹிந்துவாக இருந்தால் ஐ.எஸ்.ஐ சதி என்று சொல்லி , அந்த இயக்கத்தோடு தொடர்பு, இந்த இயக்கத்தோடு தொடர்பு என்று இதுவரை எத்தனையோ? அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யபட்டு இருப்பார்கள்.

May 28, 2011

குஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்!! அன்னா ஹசாரே அதிரடி!!




தனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே,குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.
 சிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்தமது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.

படையப்பா சிகிச்சைக்காக சிங்கப்பூர் படையெடுப்பு !!!

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் மயிலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

கடந்த 13-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் நவீன சிகிச்சை அளித்து வருகின்றனர். அமெரிக்கா டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். சிறுநீரக பாதிப்பு இருந்ததால் “டயாலிசிஸ்” சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

May 26, 2011

ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது!

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் தரக்கூடாது என மத்திய பிரதேச மாநிலம் போபால் மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
போபாலிலுள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் இந்த உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளதாக போபால் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகஙனங்களுக்கு பெட்ரோல் போடும்போது பிடிபடுபவர்களுக்கு ரூ.50 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போபால் மாநகர நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்யும் எண்ணத்துடன் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

May 25, 2011

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்; முதல்வரின் மனநிலையில் இல்லை மாற்றம்!


முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் அமைச்சர் இல்லாமலேயே தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்தவர். ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், கருணாநிதியின் துரோகங்கள் தந்த வலியால், இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயம் ஜெயலலிதா கட்சிக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உறுதுணையாக நின்றது.
 

May 24, 2011

மஞ்சள் போய் வெள்ளை வந்தது டும்..டும்..டும்..





டைப்பெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்வியில் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிய கலைஞருக்கு அதிலிருந்து மீள்வதுக்குள் கனிமொழி கைது என்னும் மரண அடி.இப்படி அடிமேல் அடி வாங்கியதால் மனுசரு ரொம்ப நொந்து போய்ட்டாரு..


இப்படி எல்லாத்துலயும் துண்டு விழுதேனு அழுது புலம்பும் போது தான் அவருக்கு ஜோசியக்காரர் சொன்ன துண்டு மேட்டர் நியாபகம் வந்திருக்கு...இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடியே ஜோசியக்காரன் சொல்லி இருக்கான் மஞ்சள் துண்டு இந்த தேர்தல உமக்கு ராசியில்லை வெள்ளை துண்டுக்கு மாருங்கனு. அதுக்கு இந்த பகுத்தறிவு கலைஞர் சொல்லிருக்காரு திடீர்னு மாத்துனா நல்லாருக்காதுய்யா அப்படினு சொல்லி தட்டி கழித்துவிட்டார்.


தேர்தல் தோல்வி, கனிமொழி கைது என்ற தொடர் மரண அடிகளால் பயபுள்ளை வெள்ளை துண்டுக்கு மாரிட்டு.கனிமொழியை பார்ப்பதற்கு திராவிடம் பேசும் கலைஞர் வெள்ளை துண்டோடுதான் டெல்லிக்கு போனாரு.


திராவிடம்,பெரியார் தொண்டர்,கடவுள் இல்லை என்று மக்களை ஏமாற்றி மக்க்ள் தலையில் துண்டு போட நினைத்தவருக்கு.. மக்களே அவருடைய துண்டை உருவுனத பார்க்கும் போது இந்த ரணகலத்திலயும் குதூகலமாத்தான்பா இருக்கு...

அடங்கமாட்டியா நித்தியானந்தா?


திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா! -

தி.மு.கவின் தோல்வியை தங்களது வெற்றியாக கொண்டாடும் பட்டியலில் பொறுக்கி நித்தியானந்தாவும் சேர்ந்திருக்கிறார். இவரது சாபத்தால்தான் தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறதாம். இந்த உண்மையை தனது பொற்கால ஆட்சிக்காக ஏங்கித்தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசும் புரட்சித் தலைவியின் காதில் யாராவது போட்டு வைத்தால்  அம்பிக்கு சட்னி நிச்சயம்.
திருவண்ணாமலையில் தரிசனம் கொடுத்த இந்த பொறுக்கி இன்னமும் தெனாவெட்டாக பேசியிருக்கிறார். ரஞ்சிதாவுடன் அவர் செய்த நடவடிக்கைகள் எல்லாம் மாஃபிங் செய்யப்பட்டதாம். வீடியோ படத்தில் இருப்பது அவரில்லையாம். அப்படியே இருந்தாலும் அதை கேட்க வேண்டியது நீதிமன்றம்தானாம். இப்படி ஃபுல் மப்பில் பேசக்கூடிய கருத்துக்களை இந்த சாமியார் நிதானமாகவே உதிர்த்திருக்கிறார்.

ஊழலின்றி அரசியல் 'நோ';உண்மையை போட்டுடைக்கும் குமாரசாமி!


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை அறவே ஒழிப்போம்'. இது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் முழங்கும் வாசகமாகும். ஆனால் எந்த கட்சியும் ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதற்கு அக்கட்சிகளின் மேல் அவ்வப்போது பாயும் ஊழல் வழக்குகளே சான்றாக உள்ளன. தேனை கையில் எடுத்தவன் புறங்கையை  சுவைக்காமல் இருக்கமுடியாது என்பதைப் போல் கோடிகளை கொட்டி செய்யும் அரசியல் வியாபாரத்தில் நியாயமாக கிடைக்கும்.
ஊதியம் மற்றும் ஊக்கத்தொகைகள், சலுகைகளை மட்டும் வைத்து 'லாபகரமான' வியாபாரம் செய்யமுடியாது என்பதால்தான் எத்தனை பூஜ்ஜியங்கள் போடுவது என்று குழம்பும் அளவுக்கு பெருந்தொகை எல்லாம் ஊழல் செய்யப்படுகின்றன. இரும்பைத் தின்று கசாயம்  குடித்தால் சரியாகிவிடும் என்று நினைப்பவர்களைப் போல் ஊழல் செய்துவிட்டு, அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் மக்கள் சேவையாற்றவே அவதாரம் எடுத்ததாக அடுக்குமொழி பேசுகின்றனர் சில அரசியல்வாதிகள். ஆனால் ஊழல் இல்லாமல் அரசியல் செய்ய இயலாது என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் ஒரு அரசியல்வாதி. 

May 23, 2011

பாமரனுக்கு புரியல. படிச்சவுக சொன்னா தேவலை.


தாமதிக்கப்ப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற சொல் வழக்கு உண்டு. அதை உண்மைப்  படுத்துவது போன்றே நமது நீதிமன்றங்களின் பெரும்பாலான நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. ஒரு கொலை வழக்கு கோர்ட்டுக்கு போனால், கொலையாளி செத்தபின்பு அவனுக்கு மரணதண்டனை வழங்குவதும், வாய்க்கால் தகராறுக்காக கோர்ட்டுக்குப் போனால், வயலையே விற்று செலவு செய்தபின்பு தீர்ப்பு வருவதும், இவ்வாறான  வேடிக்கைகளை அவ்வப்போது நீதிமன்றம் செய்து வருவதை மக்கள் பார்த்துதான் வருகின்றனர். நீதிமன்றத்தின் இழுத்தடிப்புக்கு மற்றொரு சான்றை பார்க்கலாம்.
 

திறந்தது மைசூர் கதவு; திறக்குமா முதல்வரின் மனது...?

ஒல்லியான தேகம்; முரட்டு மீசையுடன் அடர்ந்த காட்டுக்குள் அரசாட்சி செய்து மூன்று மாநில காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக  திகழ்ந்து, பல போலீசாரைக் கொன்று ஒரு தனி சாம்ராஜ்யமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த வீரப்பனை ஜெயலலிதாவின் முந்தைய  ஆட்சிக் காலத்தில் சம்காரம் செய்தது காவல்துறை. ஆனாலும் வீரப்பனின் வழக்கு மட்டும் இன்னும் ஆயுளோடு உள்ளது.

May 22, 2011

ஒசாமா இறந்தது 2006-06-26 அன்று செச்னிய சீ.ஐ.ஏ உளவாளி தகவல்!


ஒசாமாவை அபோத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொன்று உடலத்தை கடலில் எரிந்து விட்டதாக அமெரிக்க கூறியிருக்கும் நிலையில் செச்னிய சீஐஏ உளவாளியான பெர்கன் அஷர் Berkan Ashar  ரஷ்ய தொலைக்காட்சியான Channel One Russia விற்கு ஒசாமா 2006 ம் ஆண்டு இறந்ததாகவும் அவரது உடலம் பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

என்ன நடக்கிறது அரபு மண்ணில்…?


இந்த ஆண்டு தொடக்கத்தில் வட ஆப்ரிக்காவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சிறிய நாடான துனீஸியாவில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பல அரபு நாடுகளுக்கும் பரவி வருகிறது. துனீஸியாவிலும் எகிப்திலும் இந்தப் போராட்டம் அந்நாட்டின் அதிபர்களை நாட்டைவிட்டு ஓடச் செய்துள்ளது. தற்போது லிபியாவிலும் ஏமனிலும் போராட்டத் தீ பற்றி எரிகிறது.
எதனால் இந்தப் போராட்டம் நடக்கிறது? அரபு மண்ணில் என்ன நடக்கிறது? இந்தப் போராட்டங்களின் பின்னணியில் யாருடைய கை உள்ளது? என்பன குறித்து இந்த கட்டுரை விரிவாக அலசுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக வரைபடத்தில் பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாற்றி அமைக்கப்பட்டன.

எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை?


வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.
உலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்

May 21, 2011

எங்கே செல்கின்றது சமுதாயம்.....

அநீதிக்கெதிறாய் (திருவிடைச்சேரி கொலைக்கு) எதிராய் ஒன்று திரண்ட இஸ்லாமிய இயக்கங்களின் கண்டன போஸ்டர்..


இஸ்லாமிய இயக்கங்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக அதாவது தீவிரவாத முத்திரை குத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பில் கண்டன போஸ்டர்....



May 19, 2011

தே.மு.தி.க.வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்


சென்னை, மே .19 - சட்டசபை தேர்தலில் 29 எம்.எல்.ஏ.க்களை பெற்ற தே.மு.தி.க.வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்கிறது. 7.88 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற வேண்டுமானால் அந்த கட்சி 4 நிபந்தனைகளில் ஒன்றை நிறைவு செய்ய வேண்டும். 
கடைசியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகளை பெறுவதுடன் குறைந்தது ஒரு எம்.பி.யாவது பெற்று இருக்க வேண்டும்.

 வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் அந்த கட்சி சார்பில் 2 எம்.பி.க் கள் தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

எனக்காக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது - முதல்வர் ஜெ. அதிரடி உத்தரவு!



முதல்வராகப் பொறுப்பேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை அண்ணா சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்த வந்தபோது பகல் 12:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஜெயலலிதா, தனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

பொது மன்னிப்பு தாருங்கள் - முன்னாள் எகிப்து அதிபர் முபாரக்!


30 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்து அதிபராக வலம்வந்த ஹோஸ்னி முபாரக்(83) கடந்த பிப்ரவரியில் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சிக்குப் பிறகு அதிபர் பொறுப்பிலிருந்து விலகினார். எனினும்,ரா ணுவக் காவலிலுள்ள முன்னாள் அதிபரும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும், தற்போது தங்கள் அனைத்து சொத்துக்களையும் திரும்ப ஒப்படைப்பதாகவும், பதிலுக்குத் தங்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளதாக எகிப்தின் அல்-சுரூக்  நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முபாரக்கின் பொதுமன்னிப்புக் கோரும் கடிதம் எகிப்து மற்றும் அரபு ஊடகங்களில் காட்டப்படும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. தன்னாலும் தமது குடும்பத்தினராலும் நாட்டுமக்களுக்கு நிகழ்ந்துவிட்ட துர்ப்பிரயோகங்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கும்படி அக்கடிதத்தில் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதல்வரின் கோபம் கட்டிடத்தின் மீதா? கோபாலபுரத்தார் மீதா?


மிழக முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, தான் எடுத்த முடிவில் எப்போதும் பிடிவாதமாக இருக்கக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், ஆரம்பத்திலேயே பிடிவாதம் பிடிப்பது அவருக்கு சற்றே மக்கள் மத்தியில் ஒரு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா கடந்தமுறை முதல்வராக இருந்தபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசதிகள் போதாது என்பதால் ராணிமேரி கல்லூரியில் புதிய சட்டமன்றம் கட்ட ஆலோசித்ததும், அதையொட்டி எழுந்த பிரச்சினையால் அதை அவர் கைவிட்டதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
 

May 17, 2011

மறக்கமுடியுமா?


 மோடியின் அனுமதியோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!
எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!







வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை! தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!

May 16, 2011

கோவிலுக்கு மசூதி': பாஜக கோரிக்கையை நிராகரித்த முஸ்லீம் தலைவர்கள்


ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தால், பாபர் மசூதி அமைக்க உதவுவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளதை முஸ்லீம்கள் நிராகரித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்கு சற்று தள்ளி பாபர் மஸ்ஜித் கட்டுவதற்கு பாஜக உதவும் என்று நிதின் கத்காரி நேற்று கூறியிருந்தார். இதை முஸ்லீம் தலைவர்கள் நிராகரித்து விட்டனர். பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும் ஒரே குரலில் இந்த அழைப்பை நிராகரித்துள்ளன. நிராகரித்ததோடு நில்லாமல், நீதிமன்ற உத்தரவு வரும் வரை பாஜக காத்திருக்க வேண்டும் என்றும் முஸ்லீம் தலைவர்கள் கூறியுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கவனத்திற்கு!

modiகடந்த மே மாதம் 13, 2011 – தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க இயலாத ஒரு நாள் என்றால் அது மிகையில்லை. பணபலம், மத்திய மாநில அரசுகளின் செல்வாக்குகள், மீடியா பலம், அரசு பணியார்களின் ஒட்டுமொத்த ஆதரவு என்று அசுர பலத்துடன் காட்சியளித்த திராவிட முன்னேற்றக்கழத்தின் ஆட்சியை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பிய நாள்.

May 15, 2011

என் தோல்விக்காக கலங்காதீர்கள்-எம்.தமிமுன் அன்சாரி (மமக)


அன்பிற்குரிய நண்பர்களே, சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.

எத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.

தங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை.

May 13, 2011

தமிழகம்:மக்களின் கோபத்தால் தி.மு.கவுக்கு ஓய்வு

karunanidhi
சென்னை:தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கருத்துக் கணிப்புகளையும் மீறி தி.மு.க மோசமான தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கூறியது போல் மக்கள் தி.மு.கவுக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.

May 12, 2011

துபாயில் 147வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை..


துபாய், மே.12 - துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடத்தின் 147 வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். துபாயில் புர்ஜ் ஹாலிபர் என்ற கட்டிடம் உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரிமாதம் திறக்கப்பட்ட 160 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.சிகாகோவை சேர்ந்த ஸ்கிட்மோர் என்ற கட்டிட கலை நிபுணர் இதனை வடிவமைத்துள்ளார்.  இந்நிலையில் நேற்று இங்குள்ள 147 வது மாடியிலிருந்து 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 2717 அடி உயரத்தில் உள்ள 147 வது மாடியில் இருந்து குதித்த அவரது உடல் 108 வது மாடியில் விழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்றும், விடுமுறை அளிக்காததால் தான் வேலை பார்த்த நிறுவனம் உள்ள 147 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

May 10, 2011

குஜராத் படுகொலை : முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவதற்காக வெண்டுமென்றே அனுமதித்தார் மோடி!


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா?????? -டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை – சுப்ரிம் கோர்ட் அதிரடி



பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு திங்கள் கிழமை காலை விசாரனைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள் ”முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை” விதித்துள்ளனர்.
மேலும் அலஹாபத் உயர் நீதிமன்றத்தின் திர்ப்பு முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாகவும் அதாவது வழக்கமாக தீர்ப்பளிக்கும் நீதிக்கு எதிரானதாகவும் மிகவும் ஆச்சிரிமானதாகவும் (Strange and surprising) உள்ளது என கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.

மும்பை கலவரம்:ஜோடிக்கப்பட்ட வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என விடுதலைச்செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள்



mumbai riot
மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுடன் இணைந்து போலீசாரும் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தனர்.

உஸாமாவின் மரணமும் முடிவில்லாத மர்மங்களும்



osama
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். அதைப்போல் உஸாமா பின் லாடன் இருக்கும் போதும் பத்திரிகைகளுக்கு நல்ல வியாபாரத்தை வழங்கினார். இறந்ததாக கூறப்பட்ட பின்னரும் வழங்கி கொண்டிருக்கிறார்.
உலகில் இவர் அளவிற்கு குறுகிய காலத்தில் எந்த மனிதனும் இந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டிருப்பானா என்பது சந்தேகமே. அவரது மனைவிகளின் எண்ணிக்கையில் இருந்து மரணம் வரை பெரும்பாலும் அனைத்துமே ஊகம் தான். இவரை கதாபாத்திரமாக கொண்டு வடிக்கப்பட்ட கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் எவ்வித குறைவும் கிடையாது.

ஜனாஸா தொழுகையும், ராமகோபாலனின் ஒப்பாரியும்



rama kobalan
சென்னை மெளண்ட் ரோடு மக்கா மஸ்ஜிதில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் உஸாமா பின் லாடினுக்காக காயிப் ஜனாஸா (மறைவான மரணத்தொழுகை) நடத்தப்பட்டது. இந்நிகழ்வை பரப்பரப்பிற்காக காத்திருக்கும் சில பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.
இச்செய்தி வெளியானதும், ஏற்கனவே சொந்தப்புத்தியை இழந்து மந்தப்புத்தியில் வாழ்க்கையை ஓட்டும் ஹிந்து முன்னணி என்ற பாசிச அமைப்பின் தலைவர் ராமகோபால அய்யருக்கு தேசபக்தி(?) எக்குதப்பாக எகிறவே காரசாரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

லஞ்சம்:சீனாவில் முன்னாள் மேயருக்கு மரணத்தண்டனை ஆனால் இந்தியாவில்..?



20110509024449184
பீஜிங்:லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சீனாவின் முன்னாள் மேயருக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தின் நீதிமன்றம் ஷூ ஸோங்ஹெங் என்ற 56வயது முன்னாள் மேயருக்கு மரணத்தண்டனை வழங்கியுள்ளது.
 2001-2009 காலக்கட்டத்தில் பதவியிலிருக்கும்பொழுது கட்டிட நிர்மாண நிறுவனங்களிலிருந்தும் கீழ் மட்ட அதிகாரிகளிடமிருந்தும் அவர் 33.18 மில்லியன் யுவான்(ஏறத்தாழ 23 கோடி ரூபாய்) முறைகேடாக வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து