தற்போதைய செய்திகள்:

May 19, 2011

தே.மு.தி.க.வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்


சென்னை, மே .19 - சட்டசபை தேர்தலில் 29 எம்.எல்.ஏ.க்களை பெற்ற தே.மு.தி.க.வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்கிறது. 7.88 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற வேண்டுமானால் அந்த கட்சி 4 நிபந்தனைகளில் ஒன்றை நிறைவு செய்ய வேண்டும். 
கடைசியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகளை பெறுவதுடன் குறைந்தது ஒரு எம்.பி.யாவது பெற்று இருக்க வேண்டும்.

 வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் அந்த கட்சி சார்பில் 2 எம்.பி.க் கள் தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

 கடைசியாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளை பெற்று இருப்பதுடன் அக்கட்சி குறைந்தது 2 எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்து இருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் 8 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். 
இந்த அடிப்படையில் தே.மு.தி.க. முந்தைய தேர்தலில் 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றது. 2006​ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 7.88 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது. மேலும் அக்கட்சியை சேர்ந்த 29 வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளனர். 
எனவே தே.மு. தி.க.வுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதே வேளையில் பா.ம.க. தனது தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை இழக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 5.23 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளது. மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 
தேர்தல் கமிஷனின் நிபந்தனைகளில் ஒன்றை கூட நிறைவு செய்யாததால் பா.ம.க.வின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்யும் எனத் தெரிகிறது.

2 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said... [Reply]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.புஹாரி,
எனக்கு இவ்விஷயம் குறித்து நீண்டநாள் சில ஐயங்கள் இருந்தன. அது இப்பதிவை படித்தவுடன் இன்று தீர்ந்தது. மிக்க நன்றி சகோ.

(அப்புறம் dashboard-> setting-> comments-> சென்று 'word verification'-ஐ தூக்கிவிடுங்கள். பின்னூட்டம் இட சிரமமாக இருக்கிறது.)

முத்துவாப்பா.. said... [Reply]

மிக்க நன்றி சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்களே

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!