தற்போதைய செய்திகள்:

May 17, 2011

மறக்கமுடியுமா?


 மோடியின் அனுமதியோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!
எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!







வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை! தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!
இருப்பினும், உண்மையை ரெம்ப காலம் ஒழிக்கமுடியாது என்ற நியதிக்கேற்ப சில மனிதநேயர்களின் முயற்சியால் புதைக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தோண்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.இடையில் சில  மாதங்களுக்கு முன்னால் வெளியான விசாரணை அறிக்கை, முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கும் மோடிக்கும் தொடர்பு இல்லை என ஒரு முழு மலையை சோற்றில் மறைக்க, சந்தோஷத்தில் மிதந்தனர் சங்பரிவாரங்கள். 
ஆனால் உண்மை நீண்ட நாள் உறங்காது என்பதைப்  போல் மோடியின் பயங்கரவாத முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட் தற்போது உளவுத்துறையில் பணியாற்றுகிறார். அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது: 
''குஜராத் கலவரத்துக்கும், முதல்மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டினார்.இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டு கொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்குரலை கேட்க வேண்டாம் என்று சொன்னார்.
சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள புலனாய்வு குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நரேந்திரமோடிக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் எதிரானவற்றை புலனாய்வு குழுவினர் எடுத்துக்கொள்ள வில்லை. எனவே நான் தனியாக சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்கிறேன். இந்த நிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் போலீஸ் அதிகாரி கூறி இருக்கிறார்.
-முகவை அப்பாஸ். 

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!