தற்போதைய செய்திகள்:

May 10, 2011

லஞ்சம்:சீனாவில் முன்னாள் மேயருக்கு மரணத்தண்டனை ஆனால் இந்தியாவில்..?



20110509024449184
பீஜிங்:லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சீனாவின் முன்னாள் மேயருக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தின் நீதிமன்றம் ஷூ ஸோங்ஹெங் என்ற 56வயது முன்னாள் மேயருக்கு மரணத்தண்டனை வழங்கியுள்ளது.
 2001-2009 காலக்கட்டத்தில் பதவியிலிருக்கும்பொழுது கட்டிட நிர்மாண நிறுவனங்களிலிருந்தும் கீழ் மட்ட அதிகாரிகளிடமிருந்தும் அவர் 33.18 மில்லியன் யுவான்(ஏறத்தாழ 23 கோடி ரூபாய்) முறைகேடாக வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து
இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷூ ஸோங்ஹெங்கின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு ஷென்ஸென் நகரத்தின் மேயராக பதவியேற்ற இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஊழல் வேகமாக பரவியிருக்கும் சீனாவில்,ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டதை தொடர்ந்து ரெயில்வே அமைச்சர் கடந்த பெப்ருவரி மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.2010-ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 146000 பேர் பல்வேறு ஊழல்வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில்...? 1.76கோடி அடித்துவிட்டு ஹாயாக இருக்கின்றார்கள்.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!