தற்போதைய செய்திகள்:

May 19, 2011

பொது மன்னிப்பு தாருங்கள் - முன்னாள் எகிப்து அதிபர் முபாரக்!


30 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்து அதிபராக வலம்வந்த ஹோஸ்னி முபாரக்(83) கடந்த பிப்ரவரியில் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சிக்குப் பிறகு அதிபர் பொறுப்பிலிருந்து விலகினார். எனினும்,ரா ணுவக் காவலிலுள்ள முன்னாள் அதிபரும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும், தற்போது தங்கள் அனைத்து சொத்துக்களையும் திரும்ப ஒப்படைப்பதாகவும், பதிலுக்குத் தங்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளதாக எகிப்தின் அல்-சுரூக்  நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முபாரக்கின் பொதுமன்னிப்புக் கோரும் கடிதம் எகிப்து மற்றும் அரபு ஊடகங்களில் காட்டப்படும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. தன்னாலும் தமது குடும்பத்தினராலும் நாட்டுமக்களுக்கு நிகழ்ந்துவிட்ட துர்ப்பிரயோகங்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கும்படி அக்கடிதத்தில் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தன்கீழ் பணியாற்றிய ஆலொசகர்களின் தவறான தகவல்களே, நடந்துவிட்ட இழப்புகளுக்குக் காரணம் என்றும், இதற்குப் பரிகாரமாக தமது மற்றும் குடும்பத்தாரின் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முபாரக் எகிப்து அதிபராக இருந்தபோது, ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு எதிராக நடந்த அடக்குமுறைகளால் பலர் உயிரிழந்தனர். இதுகுறித்து நடந்து வரும் விசாரணைகளால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவும் எகிப்து சட்டத்தில் இடமுள்ளதால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் முபாரக் மற்றும் அவரது மனைவி அத்தகைய தண்டனையிலிருந்து தப்பிக்க இக்கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
எகிப்து ராணுவ சுப்ரீம் கவுன்ஸிலில் சமர்பிக்கப்பட்டுள்ள முபாரக்கின் பொதுமன்னிப்பு கோரிக்கைக்கு, எகிப்தின் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில அரபு நாடுகளும் ஆதரவளிப்பதாகத் தெரிகிறது. தமது மன்னிப்புக் கடிதத்தில், தான் எகிப்து அதிபராவோம் என்ற எதிர்பார்ப்பின்றி, தேசத்தைக் காக்கும் ராணுவ வீரராகப் பணியாற்றியதையும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அவரது மனைவியும் பல பொதுநலச் சேவையாற்றியுள்ளதையும் முபாரக் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி : இந்நேரம்.காம்.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!