தற்போதைய செய்திகள்:

Jun 29, 2011

ஆயுதம் வைத்து கொள்வதற்கு உரிமை உண்டு...


குடிமக்கள் ஆயுதங்கள் வைத்து கொள்வதற்கு உரிமை உண்டு: சென்னை உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், குடிமக்கள் ஆயுதங்களை வைத்து கொள்ளலாம். அதற்கு உரிமம் பெறுவதற்கான அனுமதியை சட்டம் மற்றும் ஒழுங்கு 
பிரச்சனைகளை சுட்டி காட்டி காவல் துறையினரோ அல்லது வருவாய் அதிகாரிகளோ மறுக்க முடியாது என கூறியுள்ளது.
 
கடந்த 2004-ம் ஆண்டில், எஸ். ராஜ்கபூர் என்ற விசவசாயி டபுள் பேரல் துப்பாக்கி வைத்து கொள்வதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது அதற்கான அனுமதியை வருவாய் துறை நிர்வாக ஆணையர் மற்றும் தேனி மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் மறுத்தனர்.
 
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பில், நீதிபதி டி. ஹரிபரந்தாமன், விண்ணப்பதாரர் எந்த விதமான சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடவில்லை என்ற நிலையில், அவரது பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்து கொள்வதற்கு உரிமம் வழங்கிட வேண்டும். அதனை துறை தொடர்பான அதிகாரிகள் மறுக்க முடியாது என கூறினார்.

1 comments:

Anonymous said... [Reply]

dai nee ennathaan koo koonu seidhi poattaalum daily pageview 100 thaandavae seiyyadhu..........

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!