தற்போதைய செய்திகள்:

Jun 26, 2011

உணர்வு அலுவலகம் யாருக்கு? மமக – TNTJ மோதல்


கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதன் பின்னர் காவல் துறையினர் தலையிட்டு இரு தரப்பின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தினர்.பின்னர் அலுவலக சாவியை காவல்துறையிடம் ஒப்படைக்கும் படியும் கேட்டுக்கொண்டனர்.அதன் படி ம.ம.க.வினர் சாவியை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். சாவியை தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ஆர்.டி.ஓ மூலமாகத்தான் ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்த காவல்துறை அவ்வாறே ஆர்.டி.ஓ விடம் சாவியை ஒப்படைத்து விட்டது.ஆனால் இதனை எதிர்த்து ம.ம.க வினர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக இடைக்காலத்தடை பெற்றுள்ளனர். 

மேலும் மமக வின் போக்கை கண்டித்து TNTJ  வினர் போராட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர் அவை பின்வருமாறு :

தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் அருகில் மாபெரும் கண்டனப்போர் வரக்கூடிய ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11மணிக்கு நடைபெற உள்ளது.

உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ஆதாரமாக காவல்துறை வழங்கிய கடிதம் 


Source : tntj.net

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!