தற்போதைய செய்திகள்:

Jun 24, 2011

சவூதியில் சில சகதிகள் .....


சவூதி அரேபியா என்றாலே அங்கு சட்டங்கள் கடுமையாக இருக்கும். தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று நான் சிறு வயதில் கேள்வி பட்டு இருக்கிறேன். ஏன் நம் நாட்டில் எதாவது தவறோ, கொலையோ, கொள்ளையோ நடந்தால் அடுத்த வினாடியே நாம் சொல்லுவோம் சவூதி அரேபியா மாதிரி தண்டனைகள் இருந்தால் தான் நம் நாடு உருப்படும் என்று கூறுவோம். ஏன் நான் கூட அப்படி தான் கூறி வந்தேன் சவூதி அரேபியா வராத வரை ... .


எனக்கும் என்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்கள் என் மனதில் ஈரத்துணி மாதிரி கனத்து கொண்டிருக்கிறது. அவற்றை உங்களிடம் காற்றாட விடுகிறேன் ... எனது பாரம் குறைய .....



முதலில் நேற்று நடந்த சம்பவம் தான் என்னை மிகவும் வேதனையும் , இஸ்லாமிய நாட்டில் இப்படியும் நடக்கின்றதே என்று வெட்கப்படவும் வைத்ததுள்ளது. நாங்கள் பல்வேறு பொருளாதார , குடும்ப பிரச்சனைகளால் சொந்த நாட்டை , குடும்பங்களை பிரிந்து கடல் தாண்டி பிழைக்க வந்திருக்கிறோம். அப்படி சம்பாதிக்கும் பணத்தில் சிறு பகுதியை எங்கள் ஊரில் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவ ஒரு நற்பணி மன்றத்தை ஏற்படுத்தி இறைவன் உதவியால் 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி நேற்று 18 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்தோம். அதனை முன்னிட்டு எங்களது நற்பணி மன்றத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி தம்மாமில் எங்களது உறுப்பினர் ஒருவர் வீட்டில் வைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இதற்காக நாங்கள் எங்கள் இடத்திலிருந்து 3 கார்களில் வெவ்வேறு நேரத்தில் புறப்பட்டோம் . முதல் காரில் எங்கள் மன்ற தலைவரும் , எனது இரண்டு நண்பர்களும், மற்றும் இரண்டு உறுப்பினர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். நிகழ்ச்சி இடத்தை அடைந்ததும் எனது இரண்டு நண்பர்கள் தவிர மற்றவர்கள் காரை விட்டு இறங்கி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். எனது நண்பர்கள் இருவரும் காரை பார்க்கிங் செய்வதற்காக சென்றுவிட்டனர். பார்க்கிங் கிடைக்காததால் சிறிது தூரம் தள்ளி பார்க்கிங் செய்து விட்டு இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது மக்ரிப் தொழுகை நேரம் என்பதால் ஆட்கள் நடமட்டாம் குறைவாகவே இருந்தது . அப்பொழுது அங்கே நான்கு கருப்பு அரபிகள் ஒரு பெங்காளியிடம் ஏதோ மிரட்டி பணம் பறிப்பது போன்று இவர்களுக்கு தெரிந்திருக்கின்றது உடனே இவர்கள் இருவரும் ஓட்டம எடுப்பதற்குள் அந்த நான்கு அரபிகளும் இவர்களை பிடித்து இருவர் கழுத்திலும் கத்தியை வைத்துவிட்டனர். எனது நண்பர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஒரு நண்பரை அந்த அரபிகள் தனது முட்டுகாலால் வயிற்றில் குத்தினர்.இதில் அவர் வலி தாங்க முடியாமல் கதறினார்.இதை பார்த்த இன்னொரு நண்பர் பயந்து தான் வைத்திருந்த பணத்தை எல்லாம் அந்த அரபியிடம் கொடுத்துவிட்டார். மேலும் நிகழ்ச்சியை படம் பிடிக்க வைத்திருந்த மிகவும் விலை மதிப்புள்ள (SR 1000)கேமராவையும் அவர்கள் பறித்து விட்டு ஓடி விட்டனர் . இந்த சம்பவம் நேற்று என்னை மிகவும் பாதித்தது .

இந்த ரணகளத்திளையும் ஒரு குதூகலம் என்னான்னா .. எனது இரண்டு நண்பரில் ஒருவரின் கைப்பேசி பார்க்கவே மிகவும் கொடுரமாக இருக்கும். நான் அவரை அந்த கைப்பேசியை பார்த்து பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன் . அவர் அதற்கு சொல்லுவார் இந்த ஊருக்கு இதுதான் சரி என்று.. எனக்கு அப்பொழுது அது ஏன் என்று தெரியவில்லை .. அந்த கொள்ளையர்கள் இவர்களது பணத்தையும் , கேமராவையும் பிடிங்கி விட்டு என்னுடைய நண்பரின் பேண்ட் பாக்கட்டில் உள்ள கைப்பேசியை எடுக்க சொன்னான் . உடனே எனது நண்பர் அந்த கைப்பேசியை எடுத்து காட்டிய மறுநிமிடமே அந்த கொள்ளையர்கள் அதை நீயே வைத்துக்கொள் என்று கூறி விட்டு ஓட்டம் எடுத்துவிட்டனர்... எனக்கு இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது இம்சை அரசனில் வடிவேலை கரடி காரி துப்பிய கதை தான் நினைவுக்கு வந்தது.

சரி மேட்டருக்கு போவோம்... அனைவரும் தாங்கள் செய்த பாவங்களை போக்கவும் , நன்மையை தேடியும் சவூதி அரபியா நோக்கி புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள்.. ஆனால் இப்படி பட்ட புனிதமான நாட்டில் இருந்துக் கொண்டு இவர்கள் செய்யும் காரியங்கள் என்னை போன்ற பலரையும் வேதனையிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது .

5 comments:

கோபார் வைத்தியன் said... [Reply]

வடிவேலுவை மறந்து விட்டு கவுண்டமணியை நினைவு கொள்ளுங்கள் .." சவூதியிலே இதெல்லாம் சாதாரணமப்பா "

Anonymous said... [Reply]

உங்களுக்கு செய்தி கிடைக்கவில்லை என்றால் இப்படியா? திருட்டு கொலை கொள்ளை என்பது எல்லா நாடுகளிலும் உள்ளதுதான் அதற்க்கு ஒன்று சவூதி விதிவிலக்கல்ல! அதே நேரம் மற்ற நாடுகளை காட்டிலும் பரவாயில்லை என்று சொல்லலாம் அதனையே அதனால் இதை விட்டு விட்டு சமூக அவலங்கள் பற்று எழுதுங்கள் நீங்கள் எழுதவேண்டிய செய்திகள் நிறைய இருகின்றன. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதம், ஈழப்பிரச்சனை, தலித் மக்கள் பிரச்சனை, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், இப்படி நிறைய இருக்கிறது.

முத்துவாப்பா.. said... [Reply]

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரரே ..தங்கள் பெயரை குறிப்பிட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். எனக்கு செய்தி கிடைக்கவில்லை இந்த செய்தியை போடாவில்லை இந்த சம்பவத்தால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன் அதனால் இதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். நீங்கள் சொல்வது போன்று எல்லா நாட்டிலும் திருட்டு,கொலை, கொள்ளை இருக்கும் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ஆனால் புனிதமிக்க இந்த நாட்டில் இப்படி நடப்பது தான் என்னை வேதனை அடைய வைத்தது. தங்க ஊசி என்பதற்காக கண்ணை குத்த முடியாது அல்லவா .. தவறு எங்கு நடந்தாலும் எழுதுவேன் .. இறைவன் நாடினால் இனி வரும் காலங்களில் நீங்கள் கூறிய தலைப்புகளில் எழுத முயற்சிக்கிறேன் ... நன்றி மீண்டும் வருக ஆலோசனைகளை தருக...

Anonymous said... [Reply]

Very nice opportunity to touch with kulkusma web.Selection of name also affectionate one.My brother Mr Muthu Wappa expressed very sad and unjustice news.First of all you people thanks to Allah.Why your and your friends life are protected without any injurious.You people well and high educated people eventhough my simple and humble request is safety and precautions very significants.Please convey my regrets to all people.

Thanks

Syed Mohamed Fasi

முத்துவாப்பா.. said... [Reply]

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி பாசி காக்கா... இந்த குல்குஸ்மா பெயருக்கு முழு பொறுப்பு எங்கள் கோபார் வைத்தியர் அவர்களை தான் சாரும் அவர்களிடமிருந்து தான் நான் COPYRIGHT வாங்கியுள்ளேன் . அப்புறம் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் காப்பாற்றிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்...

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!