தற்போதைய செய்திகள்:

Jun 26, 2011

பர்தா அணிந்து சென்றதால் முஸ்லிம் மாணவி நீக்கம் ..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவியை பள்ளியை விட்டு நீக்கி TC கொடுத்துள்ளது  சிதம்பெரம் பெண்கள் மேல்நிலை பள்ளி . இதனை கண்டித்து 23-6-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  நகர் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டனப் போஸ்டர்



பர்தா ...:

ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. 


ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துள்ள அச்சம், மடம், நாணம், பயர்ப்பு, அடக்கம் போன்ற பண்புகளுக்கு ஏற்ற விதமாகவே பர்தாவும் அமைந்துள்ளது. எந்த ஒரு பெண்ணையும் கண்கள் கண்ட பிறகு தான் மனம் அவள் பேரில் நாட்டம் கொள்கிறது. பர்தா அணிவதினால் கண்களுக்கு திரையிட்டாற் போலிருக்கும் தகாத எண்ணங்கள் தோன்றாது. எத்தகைய கட்டுப்பாடும் இல்லாத மற்ற சமூகப் பெண்கள் ஏன் பர்தா அணியாத நம் இஸ்லாமியப் பெண்களும் பொது இடங்களிலும், அலுவலகங்கள், கல்லூரி பாடசாலை போக்குவரத்து போன்றவற்றிலும் அனுபவிக்கும் துன்பங்கள் தொந்தரவுகள் ஏராளம். நாம் தினந்தோறும் நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.

மேற்கத்திய மக்கள் பெருவாரியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இஸ்லாத்தின் இந்த முன்னேற்றத்தை தடுப்பதற்காக யூதர்கள் பல வழிகளில் முயல்கின்றனர். அவர்கள் அனைத்து தரப்பு மக்களிடையே இஸ்லாத்தை பிற்போக்குவாத மதம் என்றும், தீவிரவாத மதம் என்றும், காட்டுமிராண்டிதனமான மதம் என்றும், பெண்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய மதம் என்றும் பலவாறாக சித்தரித்து மக்களை திசைதிருப்ப முயல்கின்றனர். இதில் ஒரு முக்கிய ஆயுதமாக பர்தாவையும் கையில் எடுத்துள்ளனர். பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்கிற ரீதியில் பர்தா பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் பரவச் செய்கின்றனர்.

அல்லாஹு எல்லா பெண்களையும் பேரழகுடன் படைத்திருக்கிறான். பர்தாவினுள் இருக்கும் அவ்வழகை ரசிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் காமவெறி பிடித்த கயவர்கள் பர்தாவை பிற்போக்குத் தனம் என கூறுகிறார்கள். பெண்களுக்கு சுதந்திரம் தருகிறோம். மேலை நாடுகளைப் போல நம் நாட்டையும் நவீனமாக்குகிறோம் எனக் கூறி அழகிப் பேட்டி, மாடலிங், மற்றும் விளம்பரப் படங்கள் போன்ற கலாச்சார சீரழிவை விளம்பர முதலாளி வர்க்கத்தினர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடத்துகிறார்கள். கணவர் மட்டுமே பார்க்க வேண்டிய அழகை எல்லோரும் பார்க்க வரும்படி விளம்பரப்படுத்தி நுழைவுச் சீட்டின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். பர்தாவை ஆதரித்தால் எங்கே இது மாதிரி அரைகுறை ஆடைகளுடன் பெண்களை நடக்கவிட்டு அவர்களைக் காட்டி பணம் சம்பாதிக்க இயலாமல் போய்விடுமோ என்கிற பயத்தினால் பர்தாவை பிற்போக்குத்தனம் என்றும் கூறுகிறார்கள்.
இஸ்லாத்தின் உண்மை நிலையை அறியாமல் பர்தா அணிவதற்கு எதிரான வாதங்களை மாற்றுமதத்தினர் வாதிட்டாலும் அதே தரப்பினரில் இஸ்லாத்தின் மேன்மையையும் பர்தாவின் முக்கியத்தையும் உணர்ந்து இஸ்லாத்தை தழுவி கொண்டே தான் இருக்கிறார்கள்.
பெண்கள் பர்தா அணிவது எந்தவிதத்திலும் அவர்கள் சுதந்திரத்தை பாதிக்கவில்லை, அவர்கள் முன்னேற்றத்திகு எந்த தடையாகவும் இல்லை எனபதை மேலே தொகுத்தளித்திருக்கும் கருத்துக்கள் தெளிவாக விளக்குகின்றன.
எனவே எல்லா பெண்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படி அவர்கள் மரணம் வரை பர்தாவைப் பேணி தன்னை அன்னிய ஆண்களின் பார்வையிலிருந்து காத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹுவின் பொருத்தத்தை தேடி கொள்ள வேண்டும்.

நன்றி :  உம்மு ஷஹீரா 



2 comments:

Anonymous said... [Reply]

பெண்களை பர்தா அணிய சொல்ல ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண்ணை காம எண்ணத்தோடு பார்க்க கூடாது என்று ஆண்களுக்கு சொல்லலாமே? மேலும் பர்தா என்பது குர்ஆனில் சொல்லப்படாத ஒன்று. அது அரேபியா பாலைவன உடை.

முத்துவாப்பா.. said... [Reply]

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இதோ உங்களுக்காக குர்ஆனில் இருந்து ஒரு வசனம் "மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ¤வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள்.
(அல்குர்ஆன் 24:31)"

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!