தற்போதைய செய்திகள்:

Jun 12, 2011

சவூதி - பச்சை, மஞ்சள், சிகப்பு


சவூதி தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று அவசர அவசரமாக நிடாகட் பற்றிய திடுக்கிடும் அறிவிப்புகளை வெளிட்டுள்ளது.
SAUDIZIATION அதாவது சவுதிமயமாக்குவது என்ற கோட்பாடில் சவூதிகளின் வேலையில்லா திண்டாத்தை குறைக்க சவூதி அரசு நிடாகட் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.அதன்படி சவூதில் செயல்பட்டு வருகின்ற கம்பெணிகள் பச்சை, மஞ்சள், சிகப்பு என்று மூன்று தரமாக பிரிக்கப்பட்டுள்ளது.
தங்களது கம்பெணி எந்த தரத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள
இந்த சுட்டியை  க்ளிக் செய்து பார்க்கவும் http://www.mol.gov.sa/Services/Inquiry/NonSaudiEmpInquiry.aspx?m=4

பச்சை தரத்தில் உள்ள கம்பெணிகள் எந்த சிக்கலுமின்றி விசா எடுத்துக்கொள்ளலாம்.மேலும் தொழிலாளர்களின் PROFESSIONயை
மாற்றிக் கொள்ளலாம். மேலும் அவர்கள் சிகப்பு தர கம்பெணி தொழிலாளர்களை அந்ததந்த கம்பெணிகளின் ஒப்புதல் இல்லாமல் தங்கள் கம்பெணிக்கு மாற்றிக் கொள்ளலாம்,அந்த தொழிலாளர்கள் இரண்டு வருடம் முதல் கம்பெணியில் வேலை செய்திருக்க வேண்டும் என்ற சட்டமும் இதுக்கு பொருந்தாது.
மஞ்சள் தரத்தில் உள்ள கம்பணிகள் செப்டம்பர், 10 முதல் புதிய விசாவிற்கு பதிவு செய்ய முடியாது.மேலும் அவர்கள் தங்கள் கம்பணி தொழிலார்கள் விசாவை புதுப்பித்து கொள்ளலாம் அனால் அந்த தொழிலாளி ஆறு வருடத்துக்கு மேல் சவூதில் வேலை செய்திருந்தால் அவருடைய விசா புதுபிக்கப படமாட்டாது.மேலும் அவர்கள் தங்கள் கம்பணி ஊழியர்கள் வேறு உயர்தர கம்பணிக்கு மாறுவதற்கு எந்த நிபந்தனையும் போட முடியாது.
சிகப்பு தரத்தில் உள்ள கம்பணிகள் புதிய விசா பதிவு செய்வதற்கும் , PROFESSION  மாற்றுவதற்கும் ,விசா மாற்றுவதற்கும் (TRANSFER) முடியாது

1 comments:

Anonymous said... [Reply]

TRAFFIC SIGNAL LA GREEN,YELLOW APPURAM RED NA NIKKANUM
COMPANY LA GREEN, YELLOW, RED NA KELAMBANUM SAUDI VITTU...

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!