சென்னையில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு போதைப் பொருள் கடத்தியதற்காக அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சென்னையை அடுத்த பட்டூர் மாங்காடு பஜார் தெருவைச் சேர்ந்தவர் பசிலாபீ (62). அவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்ததால் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்தது. அதனால் பசீலாபீ வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்க முடிவு செய்தார்.
முதலில் துபாயில் வேலை பார்த்த அவர் விசா காலம் முடிந்தவுடன் நாடு திரும்பினார். பின்னர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஏஜெண்ட் மூலம் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவர் மாதம் 13-ம் தேதி மலேசியாவுக்கு புறப்பட்டார். விமான நிலையத்திற்கு வந்த டிராவல் ஏஜென்சி உரிமையாளர் பசீலாபீயிடம் ஒரு சூட்கேசை கொடுத்து மலேசிய விமான நிலையத்தில் ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
மலேசிய விமான நிலையத்தில் இறங்கிய அவரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த ஏஜென்சி உரிமையாளர் கொடுத்த சூட்கேசில் 3 கிலோ கேட்டமின் என்னும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மலேசிய நீதிமன்றம் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக பசீலாபீக்கு தூக்கு தண்டனை விதித்ததுள்ளது. இந்த தகவல் சென்னையில் உள்ள அவரது குடும்பத்திற்கு தாமதமாக கிடைத்துள்ளது.
இந்த தகவலைக் கேட்ட அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் முதல்வரின் குறைதீர்ப்பு பிரிவிலும், சென்னை போலீஸ் கமிஷனரிடமும் பசீலாபீயை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து பசிலாபீயின் மூத்தமகள் நூர்ஜகான் கூறியதாவது,
எங்கள் குடும்பம் ஏழ்மையானது. எங்கள் தந்தை இறந்தவுடன் குடும்ப வறுமையைப் போக்க எங்கள் தாயார் திருவல்லிக்கேணி டிராவல் ஏஜெண்டு மூலம் மலேசியாவுக்கு சென்றார். அவருக்கு மலேசியாவில் மாதம் ரூ. 10 சம்பளத்தில் வீட்டு வேலை என்று ஏஜெண்ட் தெரிவித்தார்.
வீட்டில் இருந்த பொருட்களை விற்று ரூ. 35 ஆயிரத்தை ஏஜெண்டிடம் கொடுத்து கடந்த 2009-ம் ஆண்டு எங்கள் தாயார் மலேசியாவுக்கு சென்றார். அவர் புறப்படும்போது விமான நிலையத்தில் அந்த ஏஜெண்ட் எங்கள் தாயாரிடம் ஒரு சூட்கேசை கொடுத்து, அதை மலேசியாவில் இறங்கியவுடன் ஒருவர் வந்து பெற்றுக்கொள்வார் என்றார்.
அவரும் சூட்கேசில் என்ன இருந்தது என்று கூறவில்லை. எங்கள் தாயாரும் அதைப் பற்றி கேட்கவும் இல்லை, சூட்கேசை திறந்து பார்க்கவும் இல்லை. மலேசியாவில் இறங்கிய பிறகே அதில் போதைப் பொருள் இருப்பது அவருக்கு தெரிய வந்தது. தவறாக எங்கள் தாயாருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு செல்லும் முன் அவர் துபாயில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். அங்கு கிடைத்த சம்பளத்தில் தான் எனக்கும், எனது சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். வேலைக்கான விசா காலம் முடிந்ததால் தான் மலேசியாவுக்கு செல்ல சம்மதித்தார்.
எங்கள் தாயார் கைதான தகவல் கிடைத்ததும் டிராவல் ஏஜெண்டை அணுகினோம். அவரோ 2 மாதத்தில் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதாக தெரிவித்தார். 2 மாதங்களுக்கு பிறகு அவரை சந்தித்தபோது மீண்டும் 2 மாத கால அவகாசம் கேட்டார். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களுக்கு ரூ. 4 ல்டசம் நஷ்டஈடாக தருவதாக எழுத்து மூலம் தெரிவித்தார். அதையும் தரவில்லை, எங்களது தாயாரை ஜாமீனிலும் எடுக்கவில்லை. பின்னர் நாங்கள் எப்பொழுது அவரைப் பார்க்க அலுவலகத்திற்கு சென்றாலும் அவர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் எங்கள் தாயாருக்கு மலேசிய நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது என்ற தகவல் கடந்த 4 நாட்களுக்கு முன் கிடைத்தது. இதை கேட்டு எங்கள் குடும்பம் நிலை குலைந்துவிட்டது. செய்யாத குற்றத்திற்காக தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் எங்கள் தாயாரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குல்குஸ்மா – மக்களே பார்த்தீர்களா இது அனைவருக்கும் ஒரு பாடம்.விமான நிலையத்தில் யார் எந்த பொருள் தந்தாலும் வாங்ககூடாது இப்பம் பார்த்தீர்களா பாவம் ஒரு புறம் பலி ஒரு புறம் என்றாகிவிட்டது .மத்திய அரசு இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு அந்த சகோதரியை காப்பாற்ற வேண்டும் மேலும் அந்த ஏமாற்றிய டிராவல் ஏஜெண்டை உடனடியாக கைது செய்து அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் . நாசக்கார ஏஜெண்டுகளா அவர்களே வயிற்று பிழைப்புக்காக இந்த வயதிலும் உழைத்து வேலை செய்ய வேண்டும் என்று நினைகிறார்கள் உங்களுக்கும் மட்டும் ஏன் இந்த ஈன பிழைப்பு இதற்கு தெருவில் போய் பிச்சை எடுக்கலாம்.
2 comments:
இந்தப் பதிவை யார் எழுதுவார்கள் என்று எதிர் பார்த்து தான் இருந்தேன். இதை மேலிடத்துக்கு எடுத்து செல்ல "மனித நேய மக்கள் கட்சி" தான் முன் வர வேண்டும் என்று எனது ஆவல்!! ஜவாஹிருல்லா இந்த செய்தியை ஜெயலலிதாவிடம் எடுத்து கூறி மலேசியாவுக்கு தூதரகத்துக்கு எடுத்து சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று அந்த Travel Agent தப்பவே கூடாது.
சகோதரர்.தமீஜ் அவர்களே தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ..
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!