அந்த கிராமத்தில் தலித் மக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
மேலும் அந்த கிராமத்து தலித் மக்களை இன்னும் ஜாதியின் பெயரை சொல்லி அழைக்கும் இழி நிலை தொடர்கிறது. மேலும் அவர்கள் ஜாதி அடிப்படையில் வேலை வாங்க படுகிறார்கள்.
இவர்களை வேறு வேலைகள் செய்ய அனுமதிக்க படுவதில்லை. அந்த கிராம மக்கள் கூறுகிறார்கள் அன்னா ஹஸாரே என்ன சொன்னாலும் நாங்கள் கேட்போம் என்று.
ஆனால் காந்தியவாதியான இவரால் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, தனது பேச்சை வேதவாக்காக நினைக்கும் மக்களிடம் ஜாதியை ஒழிக்க முடியவில்லை. இவர் இந்த கிராமங்களில் பள்ளி கூடங்களை நடத்தி வருகிறார்.
அங்கு பயிலும் மாணவர்களிடம் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி கேள்விகள் கேட்டோம். அதற்க்கு அவர்கள் சொன்ன பதில் நமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் யார்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு விவேகானந்தர், சத்திரபதி சிவாஜி, என்று பதில் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.
இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். இவர் நடத்தும் ஒரு பள்ளி கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் என்றால் யார்? என்று தெரியவில்லை.
அது மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ். காரர்களால் தூக்கி பிடிக்கப்படும் தலைவர்களாகிய விவேகானந்தர், மற்றும் சத்திரபதி சிவாஜி போன்றோர் பெயர்களை அவர்கள் சொன்னதில் இருந்து அன்னா ஹஸாரேயை யார்? என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
விவேகானந்தர், சத்திரபதி சிவாஜி இவர்களுக்கும் சுதந்திர போராட்டத்திற்கும் என்ன சம்மந்தம்.
மேலும் இவர் நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பகுதியினர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள்.
அவர்களுக்கும் அன்னா ஹஸாரேக்கும் என்ன சம்மந்தம்? என்று பார்க்கும் போது பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்தன.
தொடர் குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்ததால் அந்த பிரச்னையை திசை திருப்ப இந்த ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதம்.
இதை வைத்து ஒரு தேசபக்தி அலையை ஏற்படுத்தி தொடர் குண்டுவெடிப்பு விஷயத்தை மக்கள் மன்றத்தில் இருந்து மறைக்கவே இந்த நாடகம் என்று அம்பலமாகி உள்ளது.
இவர் ஹிந்துதுவாவின் தீவிர ஆதரவாளர் என்பதும் அந்த கொள்கையை இந்தியாவில் நிலை நிறுத்த இவர் ஒரு மாதிரி கிராமத்தை வடிவமைத்துள்ளார் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர் உருவாகிய மாதிரி கிராமத்தில் வர்ணாசிரம கொள்கை கோலோச்சுகிறது. இந்த கிராமத்தில் ஒரே ஒரு சினிமா தியட்டர் உள்ளது.
அதில் சினிமா படங்களை திரையிட முடியாது. அதில் ஹிந்து மத இதிகாச, புராண சம்மந்தமான படங்களை மட்டும் திரையிட முடியும். இங்கு சிகரெட், பான்பிரார்க், மது வகைகளுக்கு தடை இப்படி போகிறது.
ஒரு ஹிந்த்துதுவா அடிப்படைவாத கிராமமாக அதை மாற்றி உள்ளார் ஒரு காந்தியவாதி. காந்திஜியை கொன்ற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவாளராக இவர் செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் கூட்டம் எந்த அளவுக்கு இந்தியாவில் வேரூன்றி இருக்கிறார்கள் என்று.
ஒரு காந்தியவாதின் நிலைமை இப்படி என்றால்? நமது நாட்டின் மதசார்பின்மை செத்துவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.
பாபர் மசூதி தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் முதல் இந்தியாவின் உளவுத்துறை மற்றும் போலீஸ், ராணுவம் என்று எல்லாதுறைகளிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்ற செய்திகளை நிருபிக்கும் மேலும் ஒரு சான்று இது.
நன்றி: தேஜஸ் மலையாள நாளிதழ்
4 comments:
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
>>>>
அம்பலமாகும் காவிப்படையின் இருட்டு ரகசியங்கள். "இந்தியா டுடே" <<<<
....
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் வாஞ்ஜுர் அவர்களே. தங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி.
அந்த கிராமத்தின் பெயர்,இருக்கும் இடம் தெரிவித்து இருக்கலாம்.
Ralegan Siddhi,a village in Parner taluka of Ahmednagar district, Maharashtra
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!