தற்போதைய செய்திகள்:

Aug 14, 2011

பையத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் ... - கருணாநிதி

சென்னை:"நான் பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தையும், கண்ணியத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை' என, விஜயகாந்த் பேச்சுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:அரிசி கடத்தல் பற்றி, பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்த பின்னும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட, 145 டன் அரிசி, புதுவை மாநிலத்தில் பதுக்கியதாக, அவருக்கு ஆதரவான நாளிதழிலேயே செய்தி வந்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில், இலங்கை தமிழர்களுக்காக, நான் எடுத்த நடவடிக்கைகள்,"எல்லாம் கண்துடைப்பு நாடகங்கள்' என சட்டசபையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். நான், 1956ல், சிதம்பரம் தி.மு.க., பொதுக் குழுவில், இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளேன். இதுபோன்று, இலங்கை தமிழர்களுக்கு பல நடவடிக்கைகளை ஆதரித்துள்ளேன். இதையெல்லாம் கண் துடைப்பு நாடகம் என்றால்,"ஒரு போர் என்றால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல' என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா.

இதன் மூலமே, கண் துடைப்பு நாடகம் யார் ஆடுவது என்பது தெரியும்.இரண்டாவது முறையாக, அப்துல் கலாமை ஜனாதிபதியாக வர விடாமல், நான் தடுத்ததாக விஜயகாந்த் கூறியுள்ளார். பையத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி, நேரத்தையும் கண்ணியத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. தொல்காப்பியப்பூங்கா புத்தகத்திற்கு, தொல்காப்பியர் விருதை எனக்கு வழங்கி, அந்த விழாவில் கலாம் ஆற்றிய உரையை அறியாதவர்கள், இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளா

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!