தற்போதைய செய்திகள்:

Aug 21, 2011

45வது பிறந்தநாளை மறந்ததால் கணவர் குத்திக் கொலை

தனது 45வது பிறந்தநாளை கணவன் மறந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை குத்திக் கொலை செய்தார். இந்த வெறிச்செயலை தெற்கு ரஷ்யாவில் உள்ள அஸ்ட்ரஹான் பகுதியை சேர்ந்த லயா துபிகோவா என்ற பெண் மேற்கொண்டுள்ளார்.

அவர் பொலிசாரிடம் கூறுகையில்,"தனது பிறந்த நாளை கணவர் கால்பிக் மறந்தார். அவர் வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டு சென்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது" என்றார்.
அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய கணவன் மலர் கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்த்தேன். அவர் அப்படி எதுவும் செய்யவில்லை. இது எனக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.



இந்த நிலையில் பிற்நதநாள் விருந்தாக தயாரித்த உணவை பறிமாற தயாராக இருந்த போதும் கணவன் எனது பிறந்தநாளை அறியவில்லை. இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் சமையல் கத்தியால் நெஞ்சில் குத்தினேன் என்றும் தெரிவித்தார்


Source:jaalmankumpaan 

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!