கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மூவாற்றுப்புலா நகரின் பக்கம் உள்ள கடாடி கிராமத்தில் உள்ளவர் மத்தாயி என்கிற விவசாயி. இவரது வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த 27.07.2011 அன்று தொழுவத்தில் கோழி இட்ட முட்டையை எடுத்துப் பார்த்தார். வழக்கத்தைவிட அந்த முட்டை சிறியதாக இருந்தது. சந்தேகப்பட்டவர் அந்த முட்டையை உடைத்துப் பார்த்தார். உள்ளே வெள்ளைக் கரு இருந்தது. ஆனால் மஞ்சள் கருவுக்கு பதிலாக ஒரு சிறிய பலாக்கொட்டை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானார். இந்த தகவல் அக்கம் பக்கம் தெரியவே, பலர் வந்து அதை நேரில் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இதுஒரு அசாதாரண சம்பவம் என்று அதியசத்துட்ன் சொல்லுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
Source: Puthiyaulakam
1 comments:
thanks for Sharing our news with link
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!