தற்போதைய செய்திகள்:

Aug 16, 2011

விஜயகாந்த் ஆவேச பேட்டி ....

விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனபிறகு ,அமைதியாக இருக்கிறார்..என்று நாம் நினைத்தோம்..ஆனால் அவர் சொல்வது என்னவென்றால் நல்லாட்சி நடக்கும்போது எதுக்கு தேவையில்லாமல் வெட்டி அறிக்கை கொடுக்கவேண்டும்.

மக்கள் தீர்ப்பில் காணாமல் போனவர்கள்தான் தங்களை நிலைநிறுத்த போராட்டம்,எங்களை யாராலும் அழிக்க முடியாது என கூச்சல் போடுவது...என சீன் போடுவார்கள்.மக்கள் சரியான தீர்ப்பை கொடுத்துவிட்டார்கள்.தவறு செய்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டி விட்டார்கள்.அதனால் அமைதியாக நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம் என மக்கள் கேள்விகளுக்கு, கேப்டன் டிவியில் விஜயகாந்த் பேட்டியளித்தார்.
2001 ல் ஜெ..ஆட்சியின்போது நடந்த நில ஆக்கிரமிப்பு புகார்களையும் இந்த அரசு விசாரிக்க வேண்டும் என கருணாநிதி சொல்லியிருக்கிறாரே..?

என்னய்யா பைத்தியக்காரத்தனமா இருக்கு..?அப்படி புகார் இருந்தா அடுத்து முதல்வரா வந்த நீங்க விசாரிச்சிருக்க வேண்டியதுதானே..?அப்ப..என்ன செஞ்சீங்க..?இப்ப ஆட்சி போனபிறகு சொல்றிங்களே..?ஏன்னா அப்ப அ.தி.மு.க மீது எந்த புகாரும் இல்ல்..அதனால் வழக்கு போட முடியலை.இப்ப உங்க ஆளுங்க நம்ம தலைவரே திருடும்போது நமக்கு என்னன்னு புகுந்து விளையாடிட்டாங்க...இப்ப அதுக்கு அனுபவிக்கீறாங்க..

தப்பு செஞ்சவன் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது..(விரலை நீட்டி, பல்லை கடிக்கிறார்)

ஊழலை ஒழிக்கவே முடியாதா..?


ஏன் முடியாது..?பிரதமர் சரியாக இருந்தா,மந்திரிகளை ஒழுங்கா கண்காணிச்சிருந்தா ஸ்பெக்ட்ரம் ஊழல்,ஆதர்ஷ் ஊழல்,காமென்வெல்த் ஊழல்...இதெல்லாம் நடந்திருக்குமா..?நமக்கு பிரதமர் சரியில்லை..ராசாவே பிரதமரை மிரட்டுறார்.பிரதமருக்கு நடந்தது எல்லாம் தெரியும்னு ஸ்பெக்ட்ரம் ராசா கோர்ட்டில் சொல்கிறார்...இப்படி இருக்குது நாடு.ஆள்பவர்களே உள் ஆளா இருந்தா யார் ஊழலை ஒழிக்கிறது..?அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரா போராடுறார்.போராடட்டும்..எல்லோரும் போராடுவோம்..என்ன நடக்கும்..அடக்குமுறைதான் நடக்கும்.ஆட்சியை விட்டு இறக்கினாத்தான் ஊழலை ஒழிக்க முடியும்.அதுவரை ஊழலை காப்பாத்திக்கிட்டுதான் இருப்பாங்க..

இலங்கை தமிழர்களின் பேரால் கபட நாடகம்னு கலைஞர் சொல்றாரே..?

இலங்கையில் நடந்தது போர்க்குற்றம்.ராஜபக்சேவை போர்க்குற்றவாளி.அவருக்கு உலக நாடுகள் தண்டனை வாங்கி தரவேண்டும்..என தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினாரே...அந்த தைரியம்,துணிச்சல் இருந்ததா உங்களிடம்..?சும்மா எப்போ பார்த்தாலும் 1965 ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தினேன்...1986 ல் இலங்கை தமிழர்களுக்காக ஊர்வலம் போனேன்....இப்படி பழைய கதையை திரும்ப திரும்ப சொல்றீங்களே....இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக செத்த போது பிரதமருக்கு கடிதம் எழுதுவதா போராட்டம்..?ராஜபக்சேவை திட்டமல் போராடுங்கள் என நடிகர்களை அடக்கினீர்களே..இதெல்லாம் மறந்துவிடுமா..?தமிழக சட்டசபையில் ஆட்சியில் இருந்தபோது ஒரு கண்டனமாக தெரிவித்து இருப்பீர்களா..?

உங்களை விட கபட நாடகம் ஆடியவர் யாரும் இல்ல..இதை தமிழன் புரிந்துதான் உங்கள் குரூப்புக்கே பெரிய தோல்வியை கொடுத்து மூலையில் உட்காரவைத்தான்..தமிழனை காப்பாற்றாத அதிகாரம் உங்களிடம் எதற்கு என்றான்.

பரவாயில்லை..கேப்டன் கலக்குறார்...மக்கள் கேள்வி..கேப்டன் பதில் அருமையான நிகழ்ச்சி..கேப்டன் பதில் நெத்தியடியாக இருக்கிறது...அவர் சும்மா இல்லைங்க...நேரம் வரும்போது கலக்குவார்.

Source : www.astrosuper.com

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!