தற்போதைய செய்திகள்:

Aug 18, 2011

கிறீஸ் மனிதன் பற்றிய பீதி – இலங்கை மக்கள் புரிய வேண்டியது என்ன?



ஆம் இருபது வருடங்களாக இலங்கையில் இருந்த புலி தீவிரவாதத்திற்கு மக்கள் எப்படி அஞ்சினார்களோ அதை விட ஒரு படி மேல் இந்த கீறீஸ் மனிதனுக்கு மக்கள் பயப்படுகிறார்கள்.


கிறீஸ் மனிதன் என்று பயன்படுத்தப்படும் சொல்லுக்கு பல பகுதியிலும் பலவிதமான விளக்கங்கள் மக்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றத்தைப் பற்றிய மக்கள் கருத்துக்கள் மிகவும் பயங்கரமானதாகக் கருதப்படுகிறது.

# பெரும்பாலும் இரவு நேரத்தில் வருகிறார்கள்.

# உடம்பு முழுவதும் கிறீஸை தடவிக் கொண்டு வருகிறார்கள்.

# நிர்வாணமாக இருக்கிறார்கள்.

# கையில் கத்தி போன்ற கூறிய ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.

# பெண்களைத் தான் தேடித் தேடி தாக்குகிறார்கள்.

# பெண்களின் மார்புகளை மாத்திரம் வெட்டி எடுக்கிறார்கள்.

# பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறார்கள்.

இப்படி பல வர்ணனைகள் இவர்கள் விசயத்தில் பரவலாக சொல்லப்படுகிறது.


கிறீஸ் மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் விஷயமாக சில ஊடகங்கள் பரபரப்பான விஷயங்களை வெளியிட்டு வந்தாலும், அதில் உள்ள உண்மைச் செய்திகள் மிகவும் குறைவாகத் தான் இருக்கின்றன.

கிறீஸ் மனிதன் என்று சொல்லப்பட்டவர்களில் இதுவரை ஒருவர் கூட நிர்வாணமான நிலையில், உடம்பு முழுவதும் கிறீஸ் தடவிக் கொண்டிருந்த நிலையில் யார் கையிலும் சிக்கவில்லை.

இதே நேரத்தில் சில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் கிறீஸ் மனிதன் பெயரில் பேசப்பட்டு வருகிறது.

இலங்கையின் மத்திய மாகாணம் நுவரெலியாவில் நடந்த சில சம்பவங்கள் ஊடகங்கள் வாயிலாக கிறீஸ் மனிதன் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது.

மஸ்கெலியாசாமிமலைநோர்வூட்பொகவந்தலாவடிக்கோயா பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் காலை நேரத்தில் வேலைக்குச் சென்றிருந்த போது திடீரென மர்ம மனிதர்கள் வந்துள்ளதாக வதந்திகள் பரவியதால் ஆண்பெண் தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேலைத்தளத்திலிருந்து திரும்பினார்கள். நுவரெலியா பகுதிகளில் திருட்டுத் தொழிலில் ஈடுபடும் சில கயவர்கள் அங்குள்ள சில ஆண், பெண்களை கத்தியால் தாக்கிய சம்பவமே இவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது.

இதே போல் இலங்கையின் உக்குவளைவத்துகாமம்மடவளை,அக்குறணைகம்பளைநாவலப்பிட்டியஉடத்தலவின்னதெல்தோட்டை,பரகஹதெனியகலகெதரதெல்தெனிய மற்றும் இறக்காமம்அக்கரைப்பற்று,கதுருவெல முஸ்லிம் கொலனி போன்ற பகுதிகளில் மர்ம மனித நடமாட்டம் குறித்து பொலிஸில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.  இப் பிரதேசங்களிலிருந்தும் மர்ம மனிதர்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக கண்காணிப்புக் குழுக்கள் பொலிஸாரின் உதவியுடன் நியமிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.  சில பகுதிகளில்  பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் ஆண்கள் இல்லாத வேளைகளிலேயே பெண்களிடம் இந்த மர்ம மனிதர்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட முனைவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனாலும் இவர்கள் அனைவரும் மர்ம மனிதர்கள் என்று சொல்லப்படுகிறார்களே தவிர கீறீஸ் மனிதன் என்று வர்ணிக்கப்படுபவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


கடந்த வியாழக் கிழமை வாழைச் சேனை, மாவடிச் சேனைப் பகுதியில் ஒரு பெண் தாக்கப்பட்டது தொடர்பில் மர்ம மனிதன் தாக்கினான் என்று சந்தேகப்பட்ட பொது மக்கள் தாக்கியவன் என்று சந்தேகத்திற்குள்ளான மனிதனை தேடிக்கண்டு பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மனிதன் கிறீஸ் மனிதன் என்ற செய்தி நாடு முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது.

ஆனால் பிடிபட்டவனுக்கும் கிறீசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தொடராக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவன் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவன் பிடிக்கப்பட்டுள்ளான்.


கிறீஸ் மனிதன் என்று சொல்லப்படுபவன் பெண்களை மார்புகளை வெட்டியெடுத்துச் செல்வதாக பரப்பப்பட்ட செய்திதான் மிகவும் பிரபலமானதாக பேசப்படுகிறது.

உண்மையில் இப்படி மார்பை வெட்டிச் சென்றதாக உண்மைத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எந்த ஒரு வைத்திய சாலையிலும் மார்பு வெட்டப்பட்ட நிலையில் எந்தப் பெண்ணும் அனுமதிக்கப்படவில்லை.
பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் அந்தத் தகவல் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ஜோடிக்கும் செய்திகள் இவையனைத்தும் என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.


கிறீஸை உடம்பு முழுவதும் தடவிக் கொண்டு வரும் கிறீஸ் மனிதன் தான் மாட்டினால் தப்பித்துக் கொள்வதற்காகத் தான் இப்படி செய்கிறானாம். இதே போல் அவன் எந்த ஆடையும் அணியாமல் நிர்வானமாகத் தான் வருகிறான் என்ற செய்தியையும் பரப்புகிறார்கள்.

இப்படி கிறீஸ் மனிதன் பெயரில் பரப்பப்படும் எந்த ஒரு தகவலுக்கும் ஆதாரம் ஏதும் இல்லை. இட்டுக் கட்டப்பட்ட பொய்யான தகவல்கள் தான்.

திருட்டுத் தொழிலில் ஈடுபடும் சில கயவர்கள் தங்கள் தொழிலை லாவகமாக நடத்திக் கொள்வதற்கு பயன்படுத்தும் ஊர் உத்திதான் இது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மர்ம மனிதன் என்ற பெயரில் சிக்கிய எவரும் கிறீஸ் தடவியிருக்கவில்லை, நிர்வாணமாக இருக்கவில்லை, பெண்களின் மார்புகளை வெட்டவில்லை. அவர்கள் தங்களின் தொழில் சரியாக நடக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தாக்கியிருக்கிறார்கள், கத்தியால் குத்தியிருக்கிறார்கள். இது திருடர்களின் வழமையான பாணிதான் அதனால் திருடர்களை ஊடகங்கள் மர்ம மனிதன், கிறீஸ் மனிதன் என்ற பெயரில் பிரபலப்படுத்திவிட்டது.


அன்பின் சகோதரர்களே ! இது போன்ற தகவல்கள் வரும் போது அவற்றை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் அதன் பின்னர் தான் அதைப் பற்றிய செய்திகளை உண்மையாக இருந்தால் எச்சரிக்கை நிமித்தம் மற்றவர்களுக்கு எத்திவைக்க வேண்டும்.

ஒரு செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அதைப்பற்றிய எந்த ஆய்வும் நடத்தாமல் மக்கள் மத்தியில் பரப்புவது இஸ்லாத்தின் பார்வையில் பெரும் குற்றமாகும்.

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள். (2 – 221- 223)

அதே போல கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் ஆராயாமல் பரப்புபவர்கள் பொய்யர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஹாபிஸ் இப்னு ஆஸிம் (நூல் முஸ்லிம்)

நாம் எந்தத் தகவலைக் கேள்விப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்துவிட்டுத் தான் அதைப் பற்றிய செய்திகளை வெளியில் சொல்ல வேண்டும் என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் மிகத் தெளிவாக நாம் அறிந்து கொள்ள முடியும்.

உண்மை மட்டும் பேசக்கூடிய வதந்திகளை தவிர்ந்துகொள்ளக் கூடிய நல்லவர்களாக வாழ்ந்து மரணிப்போமாக!

Source:http://vasudevanallurtntj.blogspot.com

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!