சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் ஒரு தம்பதி 25 ஆண்டுகளாக வசிக்கின்றனர். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள கடலோர நகரம் லியான்யுங்கங். இங்கிருந்து சிறிது தூரத்தில் மஞ்சள் கடலில் ஒரு தீவு உள்ளது. திருச்சி மலைக்கோட்டை கடல் நடுவே இருந்தால் எப்படியிருக்கும்.. அதுபோன்ற அமைப்பு. சராசரியான கிரிக்கெட் மைதானத்தைவிட சிறியது. ராணுவத்துக்கு சொந்தமான சில கட்டிடங்கள், ராணுவ பயன்பாட்டுக்கான டவர்கள் ஆகியவை மட்டுமே இங்கு உள்ளன. இந்த தீவில் ஒரே ஒரு தம்பதி மட்டுமே வசிக்கின்றனர். அவர்கள் பெயர் வாங் ஜிகாய் (52), வாங் ஷிகுவா (50).
தீவில் தனியாக வசிக்கும் அனுபவத்தை அவர்கள் கூறுகிறார்கள்.. ‘‘பிழைக்க வழி தேடி 1986-ம் ஆண்டில் இங்கு வந்தோம்.
இது ஆளில்லா தீவு என்று பிறகுதான் தெரியவந்தது. ஆனாலும், இங்கேயே தங்கிவிட்டோம். கடல் எல்லை மற்றும் வான் எல்லையை கண்காணிக்கும் பொறுப்பை ராணுவத்தினர் ஒப்படைத்தார்கள். வழிதவறி இந்த பக்கம் வரும் கப்பல், படகுகளுக்கு வழிகாட்டுகிறோம். படகில் வருபவர்கள் விபத்துக்குள்ளானால் காப்பாற்றுகிறோம். குடிக்க இங்கு தண்ணீர் கிடையாது. லியான்யுங்கங் நகரில் இருந்துதான் எடுத்து வர வேண்டும். திடீரென தண்ணீர் தீர்ந்துபோனால் சிக்கல்தான். 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கரன்ட் கிடையாது. பிறகு, ராணுவம்தான் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்’’ என்கின்றனர்.
ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி என்பதால் தினமும் தேசிய கொடியை ஏற்றிவிட்டு அவர்கள் இருவர் மட்டும் சல்யூட் அடிக்கின்றனர். ‘தேசிய பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பு மேனேஜர்’ என்ற அந்தஸ்தை ஜிகாய்க்கு ராணுவம் வழங்கியுள்ளது. ஆளில்லா தீவில் தனியாக இருப்பது போரடிக்கவில்லையா என்று கேட்டால் சிரிக்கிறார்கள். ‘‘25 வருஷமாக தனியாகத்தான் இருக்கிறோம். ஆரம்பத்தில் தனிமை மிக கொடுமையாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. இந்த சாம்ராஜ்யத்துக்கே நாங்கள்தான் ராஜா, ராணி என்று நினைத்து பெருமைபட்டுக் கொள்கிறோம்’’ என்கின்றனர்.
Source: Tamilmurasu

0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!