ஒகேனக்கல் : தர்மபுரி அருகே மாமியாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மருமகள், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே முருகம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). இவரது மகன் கோவிந்தன். செல்லம்மாளின் கணவர் சின்னத்தம்பி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கூலித் தொழிலாளியான கோவிந்தன், அதே பகுதியை சேர்ந்த தவமணி (22) என்பவரை ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவர், மாமியாருடன் தவமணி வசித்து வந்தார். மாமியார், மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று காலை கோவிந்தன் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது மாமியார், மருமகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தவமணி, இரும்பு கம்பியால் செல்லம்மாளை அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த செல்லம்மாள் சிறிது நேரத்தில் இறந்தார்.
இதைப் பார்த்த தவமணி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மாலையில் வீடு திரும்பிய கோவிந்தன், அம்மா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஏரியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தவமணியை நேற்றிரவு கைது செய்தனர்.
போலீசில் தவமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘‘கோவிந்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணத்துக்கு செல்லம்மாள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதையும் மீறி திருமணம் நடந்ததால் என்னிடம் தினமும் தகராறு செய்தார். நேற்றும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியாரின் தலையில் ஓங்கி அடித்தேன். ரத்தவெள்ளத்தில் அவர் விழுந்ததும் பயத்தில் தப்பி ஓடிவிட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!