கல்லூரி மாணவனுக்கு எழுதப்பட்ட காதல் கடிதம், அவர் குடுகுடு கிழவரான பிறகு டெலிவரி செய்யப்பட்ட சுவாரஸ்யம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு காதல் கடிதம் வந்தது. 1958-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அனுப்பப்பட்ட கடிதம் லே..ட்டாக 53 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்டிருந்தது. அது ‘கிளார்க் மூர்’ என்பவருக்கான கடிதம். அந்த பெயரில் தற்போது எந்த மாணவரும் இல்லை என்பதால் பழைய மாணவர்களின் லிஸ்ட்டை அலசினார்கள்.
1965-ல் படிப்பை முடித்த கிளார்க் மூர் தனது பெயரை முகமது சித்திக் என்று மாற்றிக்கொண்டு இண்டியானா மாநில தலைநகர் இண்டியானாபோலிஸ் பகுதியில் வசிக்கிறார் என்று தெரியவந்தது. காதல் கடிதம் வந்திருக்கும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. கடிதமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு வயது 74. முதல் திருமணம் மூலம் 4 குழந்தைகள் பெற்ற பிறகு, மனைவியை பிரிந்தார். 2-வது திருமணம் செய்த அவர் 15 குழந்தைகள். பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் வசித்து வருகிறார்.
லெட்டரை முகமது பிரித்து படித்தார். ‘அன்புக் காதலன் கிளார்க் மூர். முன்பைவிட இப்போது உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். ஆனாலும், ஆயிரம் மடங்கு அதிகமா லவ் பண்றேன். சீக்கிரமே உன்னிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்’ என்று எழுதி ‘வோனி’ என்று கையெழுத்து போட்டிருந்தது.
சற்று யோசித்த முகமது சித்திக்கின் கண்ணீர் நீர்த் துளிகள். ‘‘நானும் வோனியும் ஒண்ணா படிச்சோம்.
அப்ப அவ போட்ட லவ் லெட்டர்தான் இது. அப்புறம், அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். (முதல் மனைவி). எங்களுக்குள் டைவர்ஸ் ஆகிவிட்டாலும், முதல் காதலை என்னால் மறக்கவே முடியாது’’ என்றார் சித்திக். பெயரை மாற்றிக் கொண்டதால்தான் லெட்டர் தாமதமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Source: Tamilmurasu
Jul 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!