தற்போதைய செய்திகள்:

Jul 13, 2011

நடுவீதியில் கொலை - வேடிக்கைப் பார்த்த பொதுமக்கள்!!

கோவையில் பட்ட பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நாலு குண்டர்கள் சூழ்ந்து கொலை செய்ததையும், அச்சமயம் அங்கே, வீதியில் இருந்த பொதுமக்கள் திகைப்புடன் அதை வெறுமே பார்த்துக்கொண்டு இருந்ததுவும் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த படக்கருவியில் பதிவாகியுள்ளது.
இதுபற்றி கூறப்படுவதாவது:
கோவையில் கடந்த ஞாயிறன்று போக்குவரத்து மும்முரமான வீதியொன்றில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு மனிதரை இரு குண்டர்கள் வேண்டுமென்றே வழி மறிக்கவும், அந்த மனிதர் சமநிலை தவறி கீழே விழுந்துவிட, அச்சமயம் மேலும் இரு குண்டர்கள் ஆயுதங்களுடன் வந்து அம்மனிதரைக் கத்தியால் குத்திக் கொல்கின்றனர்.  மேலும் ஒருவர் அவர் மீது பாறாங்கல்லை எறிகிறார். இவை அனைத்தும் அங்கிருந்த போக்குவரத்து படக்கருவியில் (CCTV) தெளிவாகப் படமாகியுள்ளது. மேலும், அங்கிருந்த பொதுமக்கள் திகைப்புற்று கை பிசைந்து நிற்பதும் அதில் பதிவாகியுள்ளது.

காவல்துறை வந்து பார்த்த பின்பே, அவசர ஊர்திக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் அந்த மனிதர் சாவைத் தழுவிவிட்டிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நகர காவல்துறை துணை ஆணையர் எஸ். நிஜாமுத்தீன், முன்னதாக சாராயக் கடையில் நடைபெற்ற மோதலே இக்கொலைக்கான பின்னணி என்று தெரியவருவதாகச் சொன்னார். மேலும் அவர் கூறுகையில், "நாலு குண்டர்களுக்குப் பயந்துகொண்டு பொதுமக்கள் வெறுமே வேடிக்கைப் பார்த்திருந்தது மிகவும் வேதனையளிக்கும் செயல்" என்றார். "பொதுமக்கள் ஒன்று திரண்டிருந்தால் ஓர் உயிர் பாதுகாக்கப்பட்டிருக்கும்" என்றார் நிஜாமுத்தீன்.

கொலையாளிகள் கைது செய்யப்பட்ட விவரம் இதுகாறும் தெரியவில்லை.
Update: பட்டப்பகலில் வாலிபரைக் கொலை செய்தவர்கள் அவருடைய நண்பர்கள்தான் எனவும் அவர்கள் இணைந்து குடிப்பதற்குச் சென்ற இடத்தில் அவர்களுக்குள்ளே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்தே இக்கொலை நடந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

Anonymous said... [Reply]

idhu pondra vedikkai paakkuravanga ellarum...avanga pondaattiyai kadhara kadhara karpalitthaalum avanlaam vedikkai thaan paarpaarhal....

buhari shareef said... [Reply]

idhu pondra vedikkai paakkuravanga ellarum...avanga pondaattiyai kadhara kadhara karpalitthaalum avanlaam vedikkai thaan paarpaarhal....

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!