சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுகின்றனர்.
சென்னை கீழ்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சர்க்கரை நோய், தீக்காயம், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நோய்களுக்கு பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. தென்னிந்தியாவிலேயே சர்க்கரை நோய், தீக்காயத்துக்கு இங்குதான் சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அதில் தீவிர சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சை பிரிவுக்கு ஏசி வசதி செய்யப்பட்டுள் ளது.
நீரிழிவு நோயாளிகள் உள்பட 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த அறையில் டாக்டர் தங்குவதற்கு தனியாக சிறிய அறையும், செவிலியர்கள் தங்குவதற்கு சிறிய அறையும் உள்ளது.
டாக்டர் அறையில் உள்ள ஏசி மெஷின் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென்று வெடித்தது. அதில் ஏற்பட்ட தீ மளமளவென மின்சார ஒயர்களில் பற்றி மின்னல் வேகத்தில் அறை முழுவதும் பரவியது.
அறையில் இருந்த டாக்டர் பரத்வாஜ், தீ தீ என்று கத்தியபடி வெளியில் ஓடி வந்துள்ளார். நோயாளிகள் சிலரை அவர் காப்பாற்றியுள்ளார். அவரது சத்தம் கேட்டு, வெளியே படுத்திருந்த நோயாளிகளின் உறவினர்கள் ஓடி வந்தனர். அவர் கள் சிலரை காப்பாற்றினர்.
ஆனால் அதற்குள் அறை முழுவதும் புகை மண்டலமாகி மாறியது. அறையில் பல இடங்களில் தீ பிடித்த வண்ணம் இருந்தது.
அறையில் இருந்த 8 பேரையும் மற்றொரு தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதில் கிருஷ்ணாபாய்(72), தமிழ்ச்செல்வி(44), நந்தகோபால் (55) ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற 5 பேரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அணைப்பதற்கு கருவிகள் இருக்க வேண்டும். ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும். மேலும் அவசர சிகிச்சை பிரிவு என்பதால், தீ விபத்து ஏற்பட்டாலும், யாருக்கும் ஆபத்து ஏற்ப டாமல் காப்பாற்ற சிறப்பு வழியோ, மாற்று ஏற்பாடுகளோ செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கீழ்பாக்கம் மருத்தவமனையில் அதுபோன்ற ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. டாக்டர் மற்றும் உறவினர்களின் சமயோசிதத்தால்தான் 5 பேர் காப்பாற்றப்பட்டனர்.
மேலும் பக்கத்து அறையில் குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டு உள்ளது. அங்கு தீ பிடித்திருந்தால் நினைத்து பார்க்க முடியாத விபத்து நடந்திருக்கும்.
மேலும் மருத்துவமனையில் ஏசி மெஷின்களை பராமரிப்பதேயில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்துக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர். கவனக் குறைவாகத்தான் இந்த விபத்து நடந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் யார் கார ணம் என்பதை குறிப்பிடவில்லை.
இதற்கிடையில் உயிரிழந்த 3 பேருக்கும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ஸி2 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!