குஷ்பூ மாடிப்படிகள் வழியாக இறங்கி வருவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள். அப்போது மாடிப்படி செட் உடைந்ததால் குஷ்பூ கால் இடறி கீழே விழுந்தார். அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
குஷ்பூவை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் மயக்கம் தெளிய வைத்தனர். குஷ்பூவை பரிசோதித்த போது அவருடைய இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர். அதை தொடர்ந்து குஷ்பூ அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் 2 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இந்த விபத்து காரணமாக மிஸ்டர் மருமகன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
source:Maalaimalar
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!