இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த திவ்ய மெரினாவை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். மாணவியின் செல்போனில் வந்த அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் என பலவற்றை போலீசார் ஆய்வு செய்தார். அவரது நண்பர்களிடம் விசாரித்தனர். துப்பு ஏதும் துலங்காமல் திணறி வந்த நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் முக்கிய துப்பு கிடைத்தது.
மாணவியை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. அவர்கள் மாணவி தங்களை காட்டி கொடுத்து விட கூடாது என்பதற்காக கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர்.
மாணவி வீட்டில் தனியாக இருப்பதும், வீட்டில் ரூ. 3 லட்சம் பணம் இருப்பதும் யாருக்கு தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் யோசித்தனர். பணம் கொடுத்த புரோக்கரிடம் மீண்டும் விசாரித்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த வேறு சில வீடு புரோக்கர்களும், வீட்டை பார்த்து சென்றது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடினர். அவர்களில் 3 பேர் மட்டும் சம்பவ தினத்திலிருந்து தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
புரோக்கர்களில் ஒருவரான சாமியப்பன் என்பவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் விசாரித்த போது முதலில் தனக்கு ஏதும் தெரியாது என்று மறைத்தார். உரிய கவனிப்பு வழங்கியதும் திவ்ய மெரினா பற்றிய மர்மங்கள் வெளிவர தொடங்கியது.
சம்பவ தினத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு தனது கூட்டாளியான கண்ணன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் அழைத்துக் கொண்டு சாமியப்பன், மாணவி வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவி தனியாக இருப்பதை பார்த்தனர். அதன் பிறகு அந்த வீட்டை மற்றொரு புரோக்கர்கள் ரூ. 3 லட்சத்துக்கு போகியத்திற்கு பெற்ற தகவல் கிடைத்தது. இதை கண்ணன், ராஜ்குமாரும் கேள்விபட்டனர்.
சம்பவத்தன்று மதியம் ஆள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் சாமியப்பன், கண்ணன், ராஜ்குமார் ஆகியோர் மாணவி வீட்டுக்கு சென்றுள்ளனர். சாமியப்பன், மாடிபடிகளில் அமர்ந்து கொள்ள கண்ணணும், ராஜ்குமாரும் உள்ளே சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து கையில் பணம் மற்றும் நகையை எடுத்து வந்ததாகவும், பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
கண்ணன், ராஜ்குமார், ஆகிய 2 பேரும் திவ்ய மெரினாவிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கொடூரம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் போலீஸ் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை சுற்றி வளைக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
உண்மையிலேயே சாமியப்பன், கண்ணன், ராஜ்குமார் ஆகிய 3 பேர் மட்டும்தான் குற்றவாளிகளா? அல்லது வேறு யாராவது தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் போலீசார் தாமதமாக குற்றவாளியை கைது செய்தாலும் சரியான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
source: Tamilkurinchi
1 comments:
thank you very much for ur post,hav a great day
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!