காவல் உடையில் பொதுமக்களிடம் மாமூல் வசூலித்த இளம் பெண்ணை மதுரை காவல்துறை கைது செய்தது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் காவல் உடையில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களிடம் மாமூல் வசூலித்துக் செய்துகொண்டிந்தபோது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அண்ணாநகர் காவல் நிலைய காவலர்களுக்கு அந்த இளம்பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக உளறியுள்ளார்.
இதனால் குழப்பமடைந்த காவலர்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஏ.சி.வெள்ளைத்துறை தலைமையிலான டீம் தனி அறையில் வைத்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்தது. விசாரணையில் தன் பெயர் ராணி என்றும், தனக்கு 18வயது ஆகிறது எனறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு 10 காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதென்றும், "அவர்கள் பண உதவி செய்து வந்தார்கள். தற்போது அந்த அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார். "கடந்த ஒரு வருடமாக காவல் உடையில் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் இதற்கு அந்த 10 அதிகாரிகள் தனக்கு ஆதரவாக உள்ளனர்’’ என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலி பெண்காவலர் ராணி சொல்வது உண்மையா? என்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நன்றி - இந்நேரம்.காம்
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!