தற்போதைய செய்திகள்:

Jul 8, 2011

நெல்லை சாமியாரின் குல்குஸ்மா விளையாட்டு ....

பரிகாரம் பார்ப்பதாகக் கூறி இதுவரை நூற்றுக்கும் அதிக மான பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துள்ளதாக நெல்லையில் கைதான ஜோதிடர் பற்றி பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன்(36). இவர் கேரள மாநிலம் கோவளத்திலுள்ள ஒரு லாட்ஜில் துணை மேலாள ராக பணியாற்றி வருகிறார். இந்த லாட்ஜுக்கு எர்ணாகுளம் மாவட்டம் சோட்டாணிக்கரையை சேர்ந்த சாமியார் நந்தகுமார்(35) அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். இதனால் அவருடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த வாரம் அங்கு வந்த நந்தகுமாரிடம், கிருஷ்ணன் தங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்னை களை ஜாதகம் பார்த்து தீர்த்து வைக்குமாறு கூறினார். இதற்கு நந்தகுமாரும் ஒப்புக்கொண்டார். நேற்று நந்தகுமார் நெல்லை சந்திப்பிலுள்ள ஒரு பிரபல லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இதுகுறித்து தகவலை கிருஷ்ணனுக்கு தெரிவித்தார்.


இதையடுத்து கிருஷ்ணனின் மனைவி லலிதா மற்றும் உறவினரான களக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி பானுமதி(38) ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை எடுத்து கொண்டு நந்தகுமார் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

அங்கு குடிபோதையிலிருந்த நந்தகுமார் ஜாதகம் பார்ப்பது போல் நடித்து விட்டு திடீரென இருவர் மீதும் பாய்ந்து சேலையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சந்திப்பு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ்ஐ ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் நந்தகுமாரை பிடித்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலி ஜோதிடர் என்பதும், கேரளா, சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட பல பகுதிகளில் ஜோதிடம் பார்ப்பது போல் நடித்து பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுவரை 100க்கும் அதிகமான பெண்களிடம் இவர் உறவு கொண்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கல்வி வளர்ச்சி, தொழில் அபிவிருத்தி போன்றவற்றிற்கு பரிகாரம் பார்ப்பதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றியுள்ளார். மேலும் போதைப் பழக்கத்துக்கு அடிமையான நந்தகுமார் பல பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லலிதா ஏற்கனவே இவருக்கு அறிமுகமானவர். அவர் பானுமதியிடம் ஜோதிடர் பற்றி தகவல் கூறவே அவர் களக்காட்டிலிருந்து வந்துள்ளார்.

போதை மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டு பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!