உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள, ராம்பூர் ரகோலியாக் கிராமத்தைச் சேர்ந்தவர் நன்ஹென் ராம், 45. இவருக்கு ஐந்து குழந்தைகள்.
மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ராம், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, தீவிரமாக பெண் தேடி வந்தார். அவருக்கு பெண்கொடுக்க ஒரு குடும்பம் முன்வந்தது.
ஆனால், தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ள தங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என, பெண்ணின் பெற்றோர் கூறினர். அவ்வளவு பணம் கையில் இல்லாததால், எந்த தந்தையும் செய்யத் துணியாதச் செயலை ராம் செய்யத் துணிந்தார்.
பணம் திரட்டுவதற்காக, தான் பெற்ற இரண்டு மகள்களை விற்றுவிட, ராம் முடிவு செய்தார். பத்து வயதான மகள் மாலதியையும், எட்டுவயதான மகள் ராம்காந்தியையும் பக்கத்து ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம், 15 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசினார். பணத்தைக் கொடுத்துவிட்டு, குழந்தைகளை அழைத்துச் செல்ல, ராஜ்குமார், ராமின் வீட்டிற்கு வந்தார்.
விவரம், கிராம மக்களுக்கு தெரிந்துவிட்டது. மக்கள், ராம் வீட்டை முற்றுகையிட்டு, ராஜ்குமார் மற்றும் அவருடன் வந்தவர்களைப் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். ராம், தப்பி ஓடிவிட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமையும், அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த பெண்ணையும், தீவிரமாக தேடி வருகின்றனர்.
நன்றி - சிந்திக்கவும்.நெட்

0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!