277 தலித்துகளை கூட்டுப்படுகொலை செய்த ரன்வீர் சேனா என்ற உயர்ஜாதி பயங்கரவாத அமைப்பின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் என்ற முக்கியாஜிக்கு ஜஹனாபாத் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
60 வயதான சிங்கின் மீது கூட்டுப்படுகொலைக்கு தலைமை வகித்தது உள்பட 22 க்ரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பின் சந்தேகமான நிலைப்பாட்டின் காரணமாக பிரம்மேஷ்வர் சிங்கை 16 வழக்குகளில் நீதிமன்றம் விடுவித்தது. மீதமுள்ள 6 வழக்குகளில் பதானி தோலா வழக்கு தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இவ்வழக்குகளிலெல்லாம் முன்னரே சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. ஆயுத சட்டத்தின் அடிப்படையிலான ஒரு வழக்கிலும் ஜஹனாபாத் ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் தீபக் குமார் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து பிரம்மேஷ்வர் சிங்கிற்கு சிறையிலிருந்து விடுதலை பெறுவது எளிதானது. சிறைக்கு வெளியே இவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.
Source: Thoothuonline
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!