தற்போதைய செய்திகள்:

Jul 30, 2011

நான் என்ன அலங்கார பொம்மையா?-கடுப்பில் ஹினா

Hina Rabbani Khar
 இந்திய பத்தரிக்கைகள் தன் ஆடை, அலங்காரத்தைப் பற்றி அதிகம் எழுதியதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகியுள்ளார்.

பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர். அந்நாட்டின் பணம் படைத்த, சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பதவியேற்ற சில நாட்களில் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த அவர் என்ன பேசப் போகிறார், என்ன பேசினார் என்பதை விட அவரது உடையலங்காரம், ஸ்டைல் ஆகியவை குறித்து தான் இந்திய ஊடகங்கள் அதிகமாக செய்திகள் வெளியிட்டன. அவர் வகை வகையான சுடிதார்கள், வைரக் கம்மல், முத்துமாலை, டிசைனர் கண்ணாடி, டிசைனர் பேக், விலை உயர்ந்த கோட் அணிந்து வலம் வந்தார். இதுதான் பெரிதாக பேசப்பட்டது, எழுதப்பட்டது, பார்க்கப்பட்டது.பேச்சுவார்த்தையை மறந்துவிட்டு அலங்காரத்தைப் பற்றி செய்திகள் வெளியிட்டதால் இந்திய ஊடகங்கள் மீது கர் கோபம் கொண்டுள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு லாகூர் திரும்பிய அவரை செய்தியாளர்கள் விமான நிலையத்தில் சந்தித்தபோது தனது எரிச்சலை வெளியிட்டார். நிருபர்களைப் பார்த்த அவர் எரிச்சலுடன் எங்கு போனாலும் பத்திரிக்கையாளர்கள்தான் மொய்க்கிறார்கள். நீங்கள் இது போன்ற காரியங்களைச் செய்யக் கூடாது என்று கூறிவிட்டு விருட்டென்று இஸ்லாமாபாத் புறப்பட்டுப் போய் விட்டார்.

Source: Thatstamil

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!