டெக்சாஸ் மாகாணத்தின் லாங்வியூவ் நகரில் குட் ஷெப்பர்டு மெடிக்கல் சென்டரில் ஜனெத் ஜான்சன் (39) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அது 7.3 கிலோ எடை இருந்தது. குழந்தை 5.44 கிலோ எடையில் பிறக்கலாம் என ஜனெத்துக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். எதிர்பார்த்ததைவிட அதிக எடையில் இவ்வளவு குண்டாக பிறந்த குழந்தையை பார்த்ததில்லை.
டெக்சாஸ் மாகாணத்தில் 7.3 கிலோ எடையில் குழந்தை பிறந்தது இதுவே முதல் முறை. 1879ல் ஆண்டு ஓகியோவை சேர்ந்த பெண்ணுக்கு 10.43 கிலோ எடையில் பிறந்த குழந்தையே உலகின் அதிக எடையில் பிறந்த குழந்தை என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!