இதில், வெங்கடேஷ் கொலையான தகவலை அவரது வீட்டிற்கு முதலில் தெரிவித்த அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனை பிடித்து விசாரித்தபோது, வெங்கடேஷின் தாய் பூஷ்ணம்மாள் பணம் தருவதாக கூறி வெங்கடேஷை கொலை செய்ய தூண்டியதாக தெரிவித்தான். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பூஷ்ணம்மாள் தனியார் மருத்துவமனையில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். அவரி டம் அடிக்கடி பணம் கேட்டு வெங்கடேஷ் மிரட்டியுள்ளார். குடித்துவிட்டு வந்து தாயை அடித்து உதைத்துள்ளார். வெங்கடேசின் நடவடிக்கையால் அவரது மகள்களுக்கு திருமணம் கைகூடவில்லை.உதவாக்கறை மகன் உயிரோடு இருந்தால் பேத்திகளுக்கு திருமணம் நடக்காது என்று எண்ணிய பூஷ்ணம்மாள் வெங்கடேசை கொலை செய்ய திட்டமிட்டார். அதே பகுதியை சேர்ந்த மாணவன் மூலம் கூலிப்படையை ஏற்பாடு செய்தார்.
அதன்படி, அதே பகுதியை சேர்ந்த பல்லு பிரகாஷ், சரத்குமார் மற்றும் மாணவன் ஆகிய 3 பேரும் மது அருந்தலாம் என்று வெங்கடேசை நேற்று முன்தினம் காலை அழைத்து சென்றனர். பாலாறு பாலத்துக்கு அடியில் வெங்கடேசுக்கு மது ஊற்றி கொடுத்தனர். போதை ஏறியதும், பிரகாசும், சரத்குமாரும் சேர்ந்து கயிற்றால் வெங்கடேஷ் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பல்லு பிரகாஷ், சரத்குமார், மாணவன் மற்றும் பூஷ்ணம்மாள் கைது செய்யப்பட்டனர். பல்லு பிரகாஷ் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது.
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!