அவருக்கு ஒதுக்கப்பட்ட 8ம் வகுப்புக்கு செல்லாமல், 6ம் வகுப்புக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மாணவிகளிடம் சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவிகள் டான்ஸ் ஆட மறுத்துள்ளனர். டான்ஸ் ஆட மறுத்த மாணவிகளை அருகில் அழைத்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அதில், ஒரு மாணவி அழுதுகொண்டே வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். கொதிப்படைந்த பெற்றோர், பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதை கேள்விப்பட்ட மற்ற மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளியில் திரண்டனர். மேலும் போதையில் இருந்த ஆசிரியர் சுந்தரமூர்த்தியை அடித்து உதைத்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் பள்ளிக்கு விரைந்து வந்தார். நடந்த சம்பவம் குறித்து மாணவிகளிடம் அவர் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து, ஆசிரியரைவேட்டவலம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ரமாதேவி கொடுத்த புகாரின் பேரில், வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போதை ஆசிரியர் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!