தற்போதைய செய்திகள்:

Aug 11, 2011

பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் ..!!!

பிரபல பேஸ்புக் சமூகவலைத்தளத்தை, எதிர்வரும் நவம்பர் ஐந்தாம் திகதி, கொன்றழிக்க போவதாக, இனந்தெரியாத ஹேக்கிங் குழு ஒன்று சபதம் எடுத்துள்ளது. யூடியூப் மூலமாக விடுக்கப்பட்ட இச்சபதத்தில்…,  உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த, நடுத்தர தொலைத்தொடர்பு சேவையான பேஸ்புக் விரைவில் அழியப்பட்டுவிடும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நீங்களும் பேஸ்புக்கை அழிக்கும் எமது முயற்சிக்கு கைகொடுக்கலாம் என அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  ’ஆபரேஷன் பேஸ்புக்’ என பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் நடவடிக்கை நவம்பர் 5ம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது என அவர்கள் கூறியுள்ளனர்.  கடந்த வாரம் பேஸ்புக்கிற்கு பெரும் தலையிடி கொடுத்து வந்த ஸ்பாம் மன்னர் நியூயோர்க் மெட்ரோபோலியன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அமெரிக்க போலிஸ் ஏஜென்ஸிக்களின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கு Antisek எனும் ஹேக்கிங் குழுவினர் அண்மையில் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: Puthiyaulakam.com

1 comments:

Puthiyavan said... [Reply]

http://puthiyaulakam.com/?p=6180

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!