
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே முருகம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). இவரது மகன் கோவிந்தன். செல்லம்மாளின் கணவர் சின்னத்தம்பி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கூலித் தொழிலாளியான கோவிந்தன், அதே பகுதியை சேர்ந்த தவமணி (22) என்பவரை ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவர், மாமியாருடன் தவமணி வசித்து வந்தார். மாமியார், மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.