தற்போதைய செய்திகள்:

Jul 31, 2011

மாமியார் அடித்து கொலை : மருமகள் கைது!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஒகேனக்கல் : தர்மபுரி அருகே மாமியாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மருமகள், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே முருகம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). இவரது மகன் கோவிந்தன். செல்லம்மாளின் கணவர் சின்னத்தம்பி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கூலித் தொழிலாளியான கோவிந்தன், அதே பகுதியை சேர்ந்த தவமணி (22) என்பவரை ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவர், மாமியாருடன் தவமணி வசித்து வந்தார். மாமியார், மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

பெண் உருவில் காய் காய்க்கும் அதிசய மரம்!

Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது.  இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது. இருப்பினும் இது ஒரு கிரப்பிக் வேலை என சிலர் கூறிவருவதும் குறிப்படத்தக்கது.







நன்றி: http://puthiyaulakam.com

Jul 30, 2011

சரவணம்பட்டி மாணவி கொலை; 2 பேர் கற்பழித்த கொடூரம்


சரவணம்பட்டி மாணவி கொலை; 2 பேர் கற்பழித்த கொடூரம்,கோவை சரவணம்பட்டி அஜீஸ் நகரை சேர்ந்தவர் சலேத் (வயது 50). திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தாய் ரெஜினா மேரி (வயது 48). அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் திவ்ய மெரினா (வயது 17).

இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த திவ்ய மெரினாவை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். மாணவியின் செல்போனில் வந்த அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் என பலவற்றை போலீசார் ஆய்வு செய்தார். அவரது நண்பர்களிடம் விசாரித்தனர். துப்பு ஏதும் துலங்காமல் திணறி வந்த நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் முக்கிய துப்பு கிடைத்தது.

ரசாயன கலவைகள் வெடித்து மந்திரவாதி சாவு..


நெல்லை பேட்டையில் செம்பு கலசங்களை தங்கமாக மாற்ற முயன்ற சென்னை மந்திரவாதி சாவு: ரசாயன கலவைகள் வெடித்து சிதறியதால் விபரீதம்சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் கணேஷ் பொன்னம்பலம் (வயது45). மந்திரவாதியான இவர் பில்லி, சூனியம் மற்றும் சித்துவேலைகள் செய்துவந்துள்ளார். நெல்லையை அடுத்த பேட்டை செந்தமிழ்நகர் காமாட்சிநகரை சேர்ந்தவர் அழகியநம்பி. இவர் கணேஷ் பொன்னம்பலத்தின் சித்தப்பா ஆவார்.
 
கணேஷ் பொன்னம்பலம், தனக்கு தாமிரத்தை தங்கமாக மாற்றத்தெரியும் என்று என்று கூறிவந்தார். கணேஷ் பொன்னம்பலத்துக்கு மாந்திரீகம் தெரியும் என்பதால் அவர் தாமிரத்தை தங்கமாக மாற்றினாலும் மாற்றுவார் என்று அழகிய நம்பி நினைத்தார். ஆகவே கணேஷ் பொன்னம்பலத்தை தனது ஊருக்கு வந்து அதனை செய்யுமாறு அழைத்தார். இதனைத்தொடர்ந்து கணேஷ் பொன்னம்பலம் நெல்லை பேட்டையில் உள்ள தனது சித்தப்பா அழகியநம்பி வீட்டுக்கு தனது நண்பர்களான காஞ்சிபுரம் திருக்கழுகுன்றம் பெரியதெருவை சேர்ந்த சங்கர் (37), கல்பாக்கத்தை சேர்ந்த கோவிந்தன் (35) ஆகியோருடன் கடந்த மாதம் நெல்லை வந்தார்.

நான் என்ன அலங்கார பொம்மையா?-கடுப்பில் ஹினா

Hina Rabbani Khar
 இந்திய பத்தரிக்கைகள் தன் ஆடை, அலங்காரத்தைப் பற்றி அதிகம் எழுதியதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகியுள்ளார்.

பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர். அந்நாட்டின் பணம் படைத்த, சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பதவியேற்ற சில நாட்களில் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த அவர் என்ன பேசப் போகிறார், என்ன பேசினார் என்பதை விட அவரது உடையலங்காரம், ஸ்டைல் ஆகியவை குறித்து தான் இந்திய ஊடகங்கள் அதிகமாக செய்திகள் வெளியிட்டன. அவர் வகை வகையான சுடிதார்கள், வைரக் கம்மல், முத்துமாலை, டிசைனர் கண்ணாடி, டிசைனர் பேக், விலை உயர்ந்த கோட் அணிந்து வலம் வந்தார். இதுதான் பெரிதாக பேசப்பட்டது, எழுதப்பட்டது, பார்க்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் கைது!

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இன்று கைது செய்யப்பட்டார்.

திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார். பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.

அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, முந்தைய தினம் சமச்சீர் கல்வியை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திருப்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார். இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக அவரை விசாரிக்கவும் போலீஸார் அங்கே வந்தனர். இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.