தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.
எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார்.
நன்றி- மாலைமலர்
2 comments:
தனக்கென்று ஒரு கருத்தும் உரிமையும் இருப்பதில் தவறில்லை அது எந்த வகையிலும் அடுத்தவர் மனதையும் உரிமையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் . படம் என்ற பெயரில் பணம் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மற்றவர் மனதினை புண்படுத்தி தான் பெரிய சீர்திருத்தவாதி என செயல்பட முயலும் சில சின்ன புத்திக் காரர்களால் விளையும் பின்விளைவுகள் மனித சமூகதிற்கு விளையும் தீமை அதிகமாகி அதனால் "தீவிரவாதம்" என்பதற்கு விதை போடப்படுகின்றது. இதனை தடுத்து நிறுத்த அரசு முயல வேண்டும் .
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி nidurali அவர்களே ..
தங்களின் கருத்து மிகவும் அருமையாகவும் ,சிந்தனைகுறியதாகவும் இருந்தது தொடர்ந்து வாருங்கள் ஆலோசனைகளை தாருங்கள்...
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!